நல்லதைச் சொன்னால்
கேட்டுக்கணும்
நடைமுறை வாழ்க்கையை
ஏற்றுக்கணும்
நாளும் ஒருநூல்
வாசிக்கணும்
நல்லோர் உறவை
நேசிக்கணும்

இருப்பதைப் பிறருக்குக்
கொடுத்திடணும்
இல்லாதார் வறுமையைத்
தடுத்திடணும்
பொறுப்புடன் வார்த்தைகள்
பேசிடணும்
பொறாமையைப் போவென
ஏசிடணும்
வெறுப்பினை வேருடன்
வீழ்த்திடணும்
விருப்புடன் பிறரை
வாழ்த்திடணும்
செருக்குடன் நீ தினம்
நடந்திடணும்
சினமதை எளிதாகக்
கடந்திடணும்
– இராமச்சந்திரன் சின்னராஜ்