வானைத் தொட்டுப் பார்க்கலாம்
வா வா வா
வாழ்வை ரசித்து ருசிக்கலாம்
வா வா வா
தேனைத் தொட்டு சுவைக்கலாம்
வா வா வா
தேகம் விட்டுப் பறக்கலாம்
வா வா வா

மானை ஓடிப் பிடிக்கலாம்
வா வா வா
வானின் மேகம் குடிக்கலாம்
வா வா வா
மலையை உருட்டிப் புரட்டலாம்
வா வா வா
மலரின் வாசம் எடுக்கலாம்
வா வா வா
மரங்கள் நட்டு வளர்க்கலாம்
வா வா வா
மாமனிதர் கலாமை வணங்கலாம்
வா வா வா
– இராமச்சந்திரன் சின்னராஜ்