குழந்தைகளின் க்ரேயான் கலர் பென்சில் டப்பாவில், வெள்ளை நிறத்தில் ஒரு க்ரேயான் இருக்கும். அதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க மாட்டோம். அதை பயன்படுத்தி ஓர் அழகான ஓவியம் செய்யலாமா?
மறைந்திருக்கும் மர்மம் என்ன?
ஒரு வெள்ளை நிறக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளை நிற க்ரேயான் கொண்டு ஏதேனும் எழுதுங்கள் அல்லது வரைந்து கொள்ளுங்கள். நீங்கள் வரைந்திருப்பது கண்களுக்குத் தெரியாது.
அதை எப்படிக் கண்டறிவது?
வாட்டர் கலர் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான வண்ணத்தை எடுத்து, நீங்கள் க்ரேயான் கொண்டு வரைந்த காகிதத்தில் தீட்டுங்கள். இப்போது, நீங்கள் வெள்ளை நிற க்ரேயான் கொண்டு வரைந்த/எழுதியவை, கண்களுக்குப் புலப்படும்.
![](https://poonchittu.com/wp-content/uploads/2020/07/jeeboombaa-1-300x225.jpeg)
முயற்சித்துப் பாருங்கள். ரசித்து மகிழுங்கள்.