“வணக்கம் பூஞ்சிட்டூஸ், இந்த மாசம் ஒரு ஈசியான அதே சமயத்துல சூப்பரான எக்ஸ்பிரிமெண்டோட உங்களை சந்திக்க வந்திருக்கேன்” என்றது பிண்டு ரோபோ.

“வாவ், வந்துட்டுயா பிண்டு வா வா, இன்னிக்கு நம்ம என்ன அறிவியல் சோதனை செய்யப் போறோம்?” என்று கண்களில் ஆவல் மின்ன கேட்டாள் அனு.

பிண்டு, “இன்னிக்கு நம்ம செய்யப் போற எக்ஸ்பிரிமெண்டோட பெயர், ‘பாட்டிலுக்குள் மழை’. நான் தேவையான பொருட்களை எல்லாம் சொல்றேன் நீ எல்லாத்தையும் எடுத்து ரெடியா வை அனு”.

தேவையான பொருட்கள்

1. வாய் அகன்ற கண்ணாடி பாட்டில் – 1

2. செராமிக் தட்டு -1

3. கொதி நிலையில் இருக்கும் தண்ணீர்

4. ஐஸ் கட்டி – 4 அல்லது 5

செய்முறை

1. முதலில் இரண்டு இஞ்ச் அளவு சுடு தண்ணீரை கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். ( பெரியவர்களின் துணையோடு மட்டுமே செய்ய வேண்டும்)

2. அடுத்து, செராமிக் தட்டினை வைத்து பாட்டிலின் வாய்ப் பகுதியை மூடவும்.

3. மூன்று நிமிடங்கள் காத்திருக்கவும்

4. அதன் பிறகு தட்டின் மேல் ஐஸ் கட்டிகளை வைக்கவும்

5. இப்போது நீங்களே அதிசயிக்கும் வண்ணம் தண்ணீர் சுழற்சி (வாட்டர் சைக்கிள்) எக்ஸ்பிரிமெண்ட் வீட்டிலேயே தயாராகிவிடும்.

raininbottle

“செம்ம பிண்டு, ரொம்ப ஈசியான எக்ஸ்பிரிமெண்டா இருக்கே! ஆனா எப்படி பாட்டிலுக்குள்ள மழை வந்துச்சு எனக்குப் புரியலியே!” என பாவமாகக் கேட்டாள் அனு.

பிண்டு, “அதுவா அனு நான் சொல்றதைக் கவனமா கேளு! வாங்க குட்டீஸ் நம்ம இதுக்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.

அறிவியல் உண்மைகள்

பாட்டிலுக்குள் சுடு தண்ணீர் ஊற்றும் போது அந்த நீரின் சூடான ஆவி செராமிக் தட்டின் உட்புறம் இருக்கும். பிறகு நாம் செராமிக் தட்டின் வெளிப்புறம் குளிர்ச்சியான ஐஸ் கட்டியை வைக்கும் பொழுது, உட்புறம் ஈரப்பதம் உருவாகும். அதனால் பாட்டிலின் உள்ளே இருக்கும் நீராவி அனைத்தும் ஒன்று சேர்ந்து(கன்டன்ஸ்ஸேஷன்) தண்ணீர்த் துளிகளாய் மாறி மழை போல் பொழிகிறது.

இதே போல் தான் பூமியில் இருந்து கிளம்பும் சூடான காற்று, மேலிருக்கும் குளிர்ச்சியான காற்றை சந்திக்கும் பொழுது, ஈரப்பதம் உருவாகும். அதன் பிறகு அனைத்தும் ஒன்று சேர்ந்து மழையாய் மாறுகிறது என மழை எப்படி வருகிறது என்கிற அழகான விளக்கத்தையும் தந்தது பிண்டு.

“என்ன குட்டீஸ் இந்த எளிதான சோதனையின் மூலம் மழை எப்படி உருவாகிறது என்று தெரிந்து கொண்டீர்களா மீண்டும் அடுத்த மாதம் சந்திக்கிறேன், பாய்!” என்று அனுவோடு பிண்டுவும் கிளம்பிச் சென்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments