ஆசிரியர் – விழியன்

வெளியீடு:- புக்ஸ் பார் சில்ரன், சென்னை.(044-24332424)

விலை ரூ 60/-

Miyambo

இத்தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளன. ஆசிரியர் தேர்வு செய்திருக்கும் கதைகளின் தலைப்புகள் குழந்தைகளைக் கவரும் விதத்தில் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் அமைந்துள்ளன.  ‘மியாம்போ’, ‘பசாபுசா கொடுத்த நம்பிக்கை’, ‘குல்குல் மல்மல் சல்சல்லுக்குப் பிடித்த சளி’ என்பன, சில எடுத்துக்காட்டுகள். ‘மியாம்போ’ ஒரு மந்திரக்காகிதம்; ‘பசாபுசா’ ஒரு குட்டி பென்குயின்; ‘குல்குல் மல்மல் சல்சல்’, ஒரு பூதம். 

நமக்கு நன்கு தெரிந்த காகமும் நரியும்,  முயலும் ஆமையும் ஆகிய இரு கதைகளில், இக்காலத்திற்கேற்ப, புது மாற்றங்களைச் சேர்த்திருக்கிறார்.  ‘மிதந்து வந்த மந்திரத்தட்டு’ கதையில், உழைப்பின் மேன்மை சொல்லப்பட்டுள்ளது. மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம் குறித்து, ‘சொர்க்கம் எங்கே இருக்கு?’ என்ற கதை பேசுகிறது. ஆனால் எந்தக் கதையிலுமே, நேரடி அறிவுரைகளோ, நீதி போதனைகளோ இல்லை என்பது, மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம்.  கதைகள் மெல்லிய நகைச்சுவை இழையோட, சுவாரசியமாகவும், எளிய நடையிலும் அமைந்துள்ளன.  எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கானவை. உங்கள் குழந்தைகளின் சிந்தனைத் திறனை ஊக்குவிக்க, அவசியம் இந்நூலை வாங்கிக் கொடுத்து வாசித்து மகிழச் செய்யுங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments