குழந்தைகளே, எல்லோரும் எப்படி இருக்கீங்க? பள்ளிக்கூடம் திறந்து, இணைய வழி வகுப்புகள் நடக்குது. எப்பவும், வகுப்புகள், பாடம், தேர்வு, வீட்டுப்பாடம் எல்லாமே கணினி, இணையம் மூலம் செய்வதனால் ரொம்ப சலிப்பாகவும், அலுப்பாகவும் இருக்கா? ஒரு மாறுதலுக்காக, நாம் இப்போ, ஒரு கைவினை செய்யலாமா?
தேவையான பொருட்கள் :
பயனற்ற குறுந்தகடு – 1
அக்ரிலிக் வண்ணங்கள் அல்லது பெர்மனண்ட் மார்க்கர்கள் (சிடிக்களில் அதன் விபரங்களைக் குறித்து வைக்க, அழியாமல் இருக்கக் கூடிய பேனாக்கள்), சற்றே தடிமனான அட்டை அல்லது காகிதம்
செய்முறை:
ஒரு பயனற்ற குறுந்தகடு, (ஆங்கிலத்தில் CD (Compact Disk) அப்படின்னு சொல்லுவோம்), எடுத்துக்கோங்க. அதில், மீனின் செதில்கள் போல் வண்ணங்கள் அல்லது மார்க்கர் கொண்டு வரைந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக, அட்டையில், மீனின் வால் துடுப்பு (tail fin),முதுகுத் துடுப்பு (dorsal fin), வால் (tail fin) மற்றும் வாய்ப் பகுதிகளை வரைந்து ஒட்டிக் கொள்ளவும். இப்போது, அழகிய மீன் தயார்.
குறுந்தகட்டில் ஒளி படும் போது, மீன் அழகாக ஒளிரும். செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் குழந்தைகளே.
பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். தற்சமயம் மணமாகி, கடந்த பத்து ஆண்டுகளாக வசிப்பது அமெரிக்கா. கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு”. பள்ளி நாட்களில் தொடங்கிய கவிதை வாசிக்கும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலோடு வளர்ந்து வருகிறது. வாசிக்க பிடித்திருந்தபடியால், எழுதிப் பார்க்க ஒரு ஆவலுடன் துவங்கிய எழுத்துப் பயணம், இன்று கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து வருகிறது.