பட்டணத்தில் வாழும் காகத்திற்கு கிராமத்தை சுற்றி பார்க்கும் ஆசை வந்திருந்தது. இங்கே பட்டணத்தில் இருந்த காகத்திற்கு எந்த குறைபாடும் கிடையாது தேவைக்கு அதிகமாகவே உணவு மட்டுமல்ல எல்லாமே எளிதாக கிடைத்தது.


அதிக தூரம் எங்கும் பறந்தது கிடையாது. ஒரு வீட்டின் பின்புறத்து மரத்தில் குடியிருந்தது. அது காலை எழுந்தவுடன் காலை உணவு, தண்ணீர் என தனியாக கொண்டு வந்து வைத்து விடுவர்.தோணும் போது சாப்பிட்டுவிட்டு சுகமாக உறங்கி நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தது. சற்று உடல் கூட பருந்து தான் இருந்தது இந்த காகத்திற்கு. ஒரு நாள் குடியிருந்த வீட்டிற்கு சொந்தக்காரர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.


இந்த சிட்டி வாழ்க்கை போதுங்க..ஏதாவது ஒரு கிராமத்தில் போய் நாம் செட்டில் ஆகிடணும்..ஒரு நிம்மதியான வாழ்க்கை நமக்கு வேணும். இவர்கள் பேசுவதை கேட்ட காகத்திற்கு புதிதாக ஆசை தோன்றி இருந்தது .சில நாள் தானும் ஒரு கிராமத்தில் சென்று வாழ வேண்டும் என்று.. சட்டென தனக்கு தோன்றிய ஆசையை நிறைவேற்றுவதற்காக சற்று தூரம் பறக்க நினைத்தது. முதல் நாள் சற்று தூரம் மட்டுமே அதனால் பறக்க முடிந்தது .மிகவும் சோர்வாக தெரிய திரும்பவும் தன்னுடைய
இருப்பிடத்திற்கு வந்துவிட்டது ஆனால் அப்படியே விட அதற்கு மனமில்லை.

அடுத்த நாள் சற்று வேகமாகவே பறந்து சென்றது ஒரு வழியாக ஒரு கிராமத்தை கண்டுபிடித்து இருந்தது. தூர தூரமாக சிறுசிறு குடிசைகளாக அந்த கிராமம் இருந்தது. அங்கே பெரும்பாலும் நிறைய மரங்கள் இருந்தன. நிறைய மரங்களில் இதுபோலவே நிறைய காகங்கள் வசித்து வந்தது. அங்கே சென்று ஒரு காகத்திடம் நட்பு பாராட்டியது பார்த்த சில நிமிடங்களிலேயே இரண்டு காகங்களும் நண்பர்களாக மாறி இருந்தனர். புதியதாக வந்த காகத்திடம் அந்த ஊரில் வசிக்கின்ற காகம் கேட்டது. “எதுக்காக நீ இவ்வளவு தூரம் வந்திருக்கிற.. நீ எங்க இருந்து வர்ற” என்று கேட்க.. காகம் தன்னுடைய ஆசையை கூறியது.

crows

” பிறந்ததிலிருந்து பட்டினத்தில் வாழ்ந்து வந்தவன்.. கிராமத்து காகங்களை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன் “என்று சொல்ல..” சரி அப்படி என்றால் என்னோடு வா இங்கு இருப்பவர்களை அறிமுகம் செய்கிறேன் ” என்று அழைத்து சென்றது .புதியதாக வந்த காகமும் அந்த கிராமத்து காகத்திடம் சேர்ந்து ஊரை சுற்றி வளம் வந்தது. நீண்ட தூரம் இருவரும் சுற்றியுமே இருவருக்கும் சரியான அளவில் உணவு கிடைக்கவில்லை. பட்டணத்தில் இருந்து வந்த காகம் சீக்கிரமாகவே சோர்ந்து விட்டது ஆனால் அந்த கிராமத்தில் இருந்த காகம் சோர்வடையவில்லை மீண்டும் மீண்டும் உணவுக்காக அங்கேயே தேடி சுற்றி சுற்றி வந்தது. அப்போது பட்டணத்தில் இருந்து வந்த காகம் அந்த புதிய காகத்திடம் “நான் ஒரு நாளும் உணவுக்காக இப்படியெல்லாம் அலைஞ்சது கிடையாது தெரியுமா .நான் இருக்கிற இடத்திலேயே எல்லாமே கிடைக்கும் “என்று
பெருமை பேசியது.


“ஆனா இங்க அப்படி எல்லாம் கிடையாது .நாம கொஞ்சம் தேடினா தான் உணவு கிடைக்கும் .எனக்கு மட்டும் இல்ல என்னோட கூட்டத்தார் எல்லாருக்குமே அப்படித்தான் உணவு கிடைக்காட்டி கூட பிரச்சனை இல்ல .நாம திரும்பி போய் பார்க்கும் போது நமக்காக கொஞ்சம் உணவு கொண்டு வந்து வச்சிருப்பாங்க. எங்க ஊர்ல இப்படித்தான் நாங்க வாழ்ந்து வரோம்.”


“எப்படி கிடைக்கும் எனக்கு புரியலை”. புதிதாக வந்த காகம் கேட்டது.


“இங்கே காகக்கூட்டம் எல்லாமே குடும்பமா வசிக்கிறோம். யாருக்கு
அதிகமாக உணவு கிடைக்குதோ அவங்க மத்த காகங்களுக்கு கொண்டுவந்து
கொடுப்பாங்க.”


“அதாவது தானம் மாதிரியா..”


” ஆமா அப்படித்தான் பசியோட இருக்கிற மத்த காகத்திற்கு அது உணவா மாறி இருக்கும். இப்படித்தான் ரொம்ப வருஷமா வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்” என்று கிராமத்து காகம் கூற பட்டணத்து காகம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.


” அது எப்படி உனக்கு நிறைய உணவு கிடைத்ததுனா அது நீ தானே வச்சு சாப்பிடணும் .அத மத்தவங்களுக்கு கொடுத்தா அது எப்படி சரியா வரும். அதனால தான் உங்க காகக்கூட்டம் மொத்தமும் இப்படி வத்தலும் தொத்தலுமா இருக்கறீங்க ..என்ன பாரு நான் எப்படி இருக்குறேன்.. நல்லா புஷ்டியா ,குண்டு குண்டா, அழகா..” என்று தன்னை சுத்தி காட்டியபடி, பறந்து காட்டியது.


கிராமத்து காகத்திற்கு அப்போதுதான் விஷயமே புரிந்தது. இந்த காகம் தனக்கு மிஞ்சியதை கூட மற்றவர்களுக்கு கொடுக்காமல் தானே தின்று உடலை வளர்த்து இருக்கிறது என்று.. யோசிக்காமல் புதிய காகத்திடம் கூறியது. “மத்தவங்களுக்கு கொடுக்காட்டி கூட பரவாயில்லை. அடுத்தவங்க கொடுக்கறத தடுக்கக்கூடாது .நீ இத தடுக்கும் போதே உன்னோட குணம் எப்படின்னு தெரியுது .இனிமே என் கூட நீ வராத.‌ நீ உன்னோட ஊருக்கே போய்க்கோ “என்று சொல்லிவிட்டு கிராமத்து காகம் பறந்து விலகி நகர்ந்தது. பட்டணத்து காகத்திற்கு இப்போதுதான் தன்னுடைய தவறு புரிந்தது .இனி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தபடியே தன்னுடைய ஊருக்கு புறப்பட்டது.


என்ன குழந்தைகளே கதை உங்களுக்கு பிடிச்சதுதானே!! நம்மளால தானம் செய்ய முடியாட்டி கூட மத்தவங்க செய்யும்போது அதை தடுக்கக்கூடாது. அந்த காகம் செய்தது தவறு தானே.. நாமும் அது போல யாருக்கும் செய்யக்கூடாது சரியா.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments