viththaikkaara sirumi

ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன்

வானம் பதிப்பகம், சென்னை-89

விலை ரூ 50/-

இதில் குழந்தைகள் ரசிக்கக் கூடிய 10 கதைகள், இத்தொகுப்பில் உள்ளன. முதல் கதையான ‘வித்தைக்காரச் சிறுமி’யில் வரும் சிறுமிக்கு, சாக்லேட் வாங்க, கையில் போதுமான காசு இல்லை. முதல்நாள் அவள் வித்தையைப் பார்த்திருந்த பள்ளிக் குழந்தைகள், தங்களிடமிருந்த காசைக் கொடுத்து, அவள் விருப்பப்பட்ட  சாக்லேட்டை வாங்கித் தருகின்றனர். பதிலுக்கு அவள் பத்திரமாகப் பாதுகாத்த கடல்சங்கை கொண்டுவந்து அவர்களிடம் தருகிறாள்.  குழந்தைகளின் அன்பு நிறைந்த உலகை அற்புதமாய்ப் படம் பிடிக்கும் கதையிது.

“விண்ணைத் தாண்டி வந்தவனே’ கதையில், மழை மேகம் கெட்டியான பாறையாகி, பள்ளி மைதானத்தில் விழுந்து, சிறுவர்களிடம் பேசுகின்றது. அவர்கள் விளையாடி மகிழ உதவுகின்றது.  ஒரு குளத்துத் தவளைக்கு கிரீடம் கிடைத்தவுடன் அதிகாரம் செய்ய ஆரம்பிக்கின்றது. நகரத்தில் பிறந்த டிங்கி குரங்கு, முதன்முதலாகக் காட்டுக்குள் நுழையும் போது,  பிரச்சினைகளைச் சந்திக்கின்றது. காளான்களின் அழகு ராணியான லக்ஸி, பறங்கிக்காய் வண்டியில் பயணம் செய்கிறாள். இது போல் புதுமையான கற்பனையும், சுவாரசியமும் நிறைந்த கதைகள் இதில் உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *