தமிழே நம் தாய் மொழி
படிக்க எழுத எளிதான
தமிழைப் படி நன்றாக!
பாதி எழுத்து பாதிப்பில்லை;
பின் எழுத்து முன்வரும்
தொல்லையில்லை; ஒருபோதும்.
விரல் கூட்டிப் படிக்க எளிதான,
தமிழைப்படி நன்றாக!
சரளமாக போகும் ஆறு போல,
சுலபமாய் படிக்கலாம் எளிதாக.
தாய் மொழியில் படிக்க
எதுவும் தானே விளங்கிடும் நன்றாக!
மனதில் படியும் கருத்துக்கள்
மறக்கவே மறக்காது
அதனை நீ ஒத்துக்கொள்!
– சசிகலா விஸ்வநாதன்
