தன் தோழியின் கதையை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்த ராணி லேஇஸு தன் கோப்பையில் விழுந்த புழுவின் கூட்டைக் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து ராணி தன் தேநீரைப் பருக கோப்பையை எடுத்தவர், “ ஐயோ என்ன இது” என்று பலமாகக் கத்தினார்.மேலும் படிக்க –>

“ஓ! ஆனி! நான் என்ன பண்ணுவேன்? அந்த மோசமான ஜெர்டி இப்ப தனியா உட்கார்ந்து இருக்கா. பிலிப்ஸ் என்னை அவள் பக்கத்துல உட்கார வைச்சுடுவார். மறுபடியும் பள்ளிக்கு வா ஆனி!” இதைச் சொன்ன போது டயானா அழுது விடுவாள் போல் இருந்தது.
“இந்த உலகில் உனக்காக நான் எதை வேணுமானாலும் செய்வேன் டயானா. ஆனால் இதை என்னால செய்ய முடியாது. தயவு செஞ்சு இதை மட்டும் கேட்காதே” வருத்தத்துடன் சொன்னாள் ஆனி.
மேலும் படிக்க –>

ஃபாக் மற்றும் பாஸர்பார்ட்டவுட் இருவரும் இணைந்து, தூங்கிக் கொண்டிருந்த அவ்டாவை கவனமாக ரயிலில் படுக்க வைத்தனர். சற்று நேரத்தில் ரயில் அலகாபாத்திலிருந்து பனாரஸ் (இன்றைய வாரணாசி) நகரை நோக்கிப் புறப்பட்டது. ரயில் புறப்பட்டுக் கொஞ்ச நேரம் கழித்துக் கண் விழித்தாள் அவ்டா.மேலும் படிக்க –>

எண்பது நாட்களில் என்னால் உலகைச் சுற்றிவர முடியும் என்று நண்பர்களிடம் சவால்விட்டு லண்டனிலிருந்து கிளம்புகிறார் ஃபிலியாஸ் ஃபாக்மேலும் படிக்க –>

ஆனி பிக்னிக் சென்ற பிறகு, மரிலா மாத்யூவிடம் தன் உடை ஊசி (brooch)திரும்பக் கிடைத்த விபரத்தைத் தெரிவித்தார்மேலும் படிக்க –>

வங்கியைக்‌ கொள்ளையடித்த கொள்ளைக்காரர் ஃபிலியாஸ் ஃபாக் தான் என்று முடிவு செய்து விட்டார் திரு. ஃபிக்ஸ். நிறைய தகவல்கள் சேகரிக்கலாம் என்று பாஸர்பார்ட்டவுட்டிடம் தொடர்ந்து உரையாடலை வளர்த்தார் ஃபிக்ஸ்.மேலும் படிக்க –>

(Anne of Green Gables – By Lucy Maud Montgomery)தமிழாக்கம் – ஞா.கலையரசி ஆனி போன பிறகு மரிலா குழப்பமான மனநிலையுடனேயே மாலை வேலைகளைப் பார்த்தார். பொக்கிஷமாக அவர் பாதுகாத்து வைத்து இருந்த உடை ஊசி (Brooch) காணாமல் போனதை நினைத்துக் கவலைப்பட்டார்.‘ஆனி அதைத் தொலைத்து இருந்தால் என்ன செய்வது? ஆனி அதை எடுத்துவிட்டு இல்லை என்று மறுப்பது எவ்வளவு கெட்ட குணம்? அதுவும் அப்பாவியான அந்த முகத்தைமேலும் படிக்க –>

இப்ப வேலை செய்ய வேண்டிய நேரம்னு அவளுக்கு நல்லாத் தெரியும். ஆனால் மாத்யூ கிட்ட பேசிக்கிட்டு இருக்கா. அவரும் இவ பேசறதை மடையன் மாதிரி கேட்டுக்கிட்டு இருக்கார். இந்த மாதிரி முட்டாள்தனமான ஆளை நான் பார்த்ததே இல்லை.மேலும் படிக்க –>

சூயஸ் கால்வாயில் இருந்து இன்னொரு நபரை அவர்களது பயணத்தில் அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.மேலும் படிக்க –>

1872ல் வெளியான எண்பது நாட்களில் உலகத்தைச் சுற்றி (Around the world in eighty days) என்ற நாவல், Journey to the centre of the earth உள்ளிட்ட அறிவியல் புனைவும், பயண அனுபவங்களும் நிரம்பிய பல நாவல்களை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்னேயின் குறிப்பிடத் தகுந்த படைப்பாகும். மிகுந்த சுவாரசியமான இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க –>