மியாவ் மியாவ் பூனைக்குட்டி
மீசைக்காரப் பூனைக்குட்டி
மீனைத் தின்னும் பூனைக்குட்டி
வெண்ணெய் திருடும் பூனைக்குட்டி (மியாவ்)
புலியின் வம்சம் பூனைக்குட்டி
எலியைப் புடிக்கும் பூனைக்குட்டி
வெள்ளை மஞ்சள் பூனைக்குட்டி
வெளையாட்டுத் தோழன் பூனைக்குட்டி (மியாவ்)
கருப்பு வெள்ளை பூனைக்குட்டி
கருத்தைக் கவரும் பூனைக்குட்டி
மதிலு மேல பூனைக்குட்டி
குதிக்கும் பக்கம் யாரறிவார்!!?” (மியாவ்)
அருமையான முன்னெடுப்பு. தொடர்ந்து சிறப்பாக பயணப்பட வாழ்த்துகள்
தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் எங்கள் அகமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறோம்.
சிறார்களின் நலனுக்காக பூஞ்சிட்டு வெளிவருவதை இருகரம் நீட்டி வரவேற்கிறேன். இதன் பிடிஎப் கிடைத்தால் நண்பர்களுக்கு பகிருவேன்.
வாழ்க வளத்துடன்
கன்னிக்கோவில் இராஜா
சிறார் இலக்கிய எழுத்தாளர்.
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி சார்! பூஞ்சிட்டு இதழின் இணைப்பை நண்பர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். இணைப்பு:-
https://poonchittu.com/
தங்கள் படைப்புகளையும், எங்கள் இதழுக்கு அனுப்பி, பூஞ்சிட்டு சிறகடித்துப் பறக்க, உதவுவீர்கள் என்று நம்புறோம்.
மீண்டும் நன்றி!
பூனைக்குட்டி பாட்டு பிரமாதம். பாராட்டுகள்.
தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி கீதா!