1. அறைகள் அறுநூறு; அத்தனையும் ஒரே அளவு. அது என்ன?
2. வேரில்லை முளைத்திருக்கு; இலையில்லை, கிளையிருக்கு. அது என்ன?
3. ஒலி கொடுத்து அழைப்பான்; உரையாடலில் திளைப்பான். அவன் யார்?
4. கடையிலே விற்கிற சாமான்களில் அத்தை ஒன்று, ஆணி ஒன்று – அது என்ன?
5. ஒரு துரைக்கு இரண்டு தொப்பி, அது என்ன?
— பதில்கள் அடுத்த பக்கத்தில்
மதுரையில் இருக்கிறேன். M. A., M. P hil., முடித்திருக்கிறேன். நான் கடந்த 28 வருடங்களுக்கும் மேலாகப் பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். 30 வகை சமையல் இணைப்புப் புத்தகமாக மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி, அவள் விகடன், தேவதை (இப்போது வருவதில்லை)… போன்ற பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இப்போது தான் கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறேன். YouTube ஒன்றிலும் போட்டு வருகிறேன்.