க்ருஸ்துமஸ் வருதாம். எல்லோர் வீட்லயும் வண்ண வண்ண விளக்குகள், நட்சத்திர விளக்குகள் எல்லாம் வச்சு அலங்கரிச்சிக்கிட்டு இருந்தாங்க.

சின்னப் பசங்களுக்கு எல்லாம் கிருஸ்தும்ஸ் அப்டின்னாலே ரொம்ப ஜாலியா இருக்கும்.

புது ட்ரஸ், கேக், கிருஸ்துமஸ் தாத்தா தரும் பரிசு, நண்பர்களோட விளையாட்டு அப்டின்னு ரொம்ப மகிழ்ச்சியா இருப்பாங்க.

அப்டித் தான் நம்ம ஷிவானியும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தாள். ஷிவானியோட தாத்தா அவளுக்கு புது ட்ரஸ் வாங்கி குடுத்திருந்தாங்க. பாட்டி கேக் செஞ்சு தர்றதா சொல்லிருந்தாங்க.

அப்பா அவளுக்காக அழகழகான விளக்குகள் வாங்கி வீடெல்லாம் அலங்காரம் செஞ்சி வச்சாங்க.

” இந்த வருசம் வானத்துல கிருஸ்துமஸ் நட்சத்திரம் வருமாமே? 800 வருசத்துக்கு ஒரு முறை தான் அந்த நட்சத்திரம் வருமாம். அது இந்த வருசம் வருதாம்.” அப்டின்னு தாத்தா பாட்டிக்கிட்ட கேட்டாங்க.

“ஆமாம், சூரிய குடும்பத்தோட பெரிய கோள்களான வியாழனும், சனியும் பக்கத்துல பக்கத்துல வர்றப்ப கிடைக்கிற வெளிச்சம் தான் கிர்ஜ்ஸ்துமஸ் நட்சத்திரமாம். அந்த அரிய வானியல் நிகழ்வு இந்த வருசம் நடக்கப் போகுது” அப்டின்னு பாட்டி சொன்னாங்க.

இதெல்லாம் கேட்ட ஷிவானி, மாடிக்கு போய் கிருஸ்துமஸ் நட்சத்திரத்த பார்க்கலாம்னு முடிவு செஞ்சா.

பாட்டி சீரியல் பாத்துட்டு இருந்தாங்க. தாத்தா பாட்டிக்கு கால்ல எண்ணை தடவி மசாஜ் செஞ்சி விட்டுட்டு இருந்தாங்க. பாட்டிக்கு கால் வலி பாவம் அப்டின்னு நினச்சா ஷிவானி.

அப்பா எல்லாருக்கும் டீ போட்டுட்டு இருந்தாங்க. ஷிவானியோட அம்மா சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சிட்டு இருந்தாங்க.

எல்லாரும் எதோ ஒரு வேலையா இருந்ததால, தனியா மாடிக்கு போகக் கூடாதுன்னு அப்பா சொல்லிருக்காங்களே அப்டின்னு யோசிச்ச ஷிவானி, வீட்டு வாசல்ல நின்னு கிருஸ்துமஸ் நட்சத்திரம் தெரியுதான்னு பார்த்துட்டு இருந்தாள்.

அப்ப, திடீர்னு அவ முன்னாடி வந்து நின்னாரு கிருஸ்துமஸ் தாத்தா.

maaavanam6

“சாண்டா நீங்களா? நிஜம்மாவே நீங்க தானா?” அப்டின்னு கேட்டா ஷிவானி.

“ஆமாம் ஷிவானி” ஹோ ஹோ ஹோ அப்டின்னு சிரிச்சாரு கிருஸ்துமஸ் தாத்தா.

“சேட்டை செய்யாத நல்ல பிள்ளைகளுக்கு கிருஸ்துமஸ் பரிசா அவங்க விரும்புற பொம்மைகளை குடுக்கனும். அந்த வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு வட துருவத்துல. எனக்கு உதவி செய்ய நீயும் வர்றியா ஷிவானி?” அப்டின்னு கேட்டாரு தாத்தா.

“நானா!” அப்டின்னு ஆச்சர்யமா கேட்டா நம்ம ஷிவானி.

“ஆமா, ஷிவானி, பூஞ்சிட்டு குழந்தைகள்லாம் எனக்கு ஏன் கிருஸ்துமஸ் தாத்தா கிப்ட் குடுக்கனும் அப்டிங்கற தலைப்புல பேசுறாங்களாம்.

பூஞ்சிட்டு படிக்கிற பட்டு குழந்தைகள் எல்லாமே நல்ல குழந்தைகள் தான் இல்லயா?

வாசிப்பு இருந்தாலே அந்த குழந்தைகள் சிறப்பானவங்களா வருவாங்க. தவறு செய்ய மாட்டாங்க.

அதனால பூஞ்சிட்டு குழந்தைகள் சொல்ற மற்ற காரணங்கள கேட்க நானும் ஆவலோட இருக்கேன் ஷிவானி.

அவங்க கதைகள கேட்டுட்டு நீயும் நானும் யாருக்கு பரிசு குடுக்கலாம்னு முடிவு செய்வோம்.” அப்டின்னு சொன்னாரு சாண்டா க்ளாஸ்.

“ஹை ஜாலி” அப்டின்னு குதிச்சிக்கிட்டே, கிருஸ்துமஸ் தாத்தாவோட வண்டில ஏறி வட துருவத்துக்கு பறந்துக்கிட்டு இருந்த ஷிவானி, “டொம்ம்ம்ம்” னு சத்தத்தோட கட்டில்ல இருந்து கீழ விழுந்துட்டா…

அட, கிருஸ்துமஸ் தாத்தாவ பார்த்ததெல்லாம் கனவா? அப்டின்னு சிரிச்ச ஷிவானியோட கட்டில்ல அவளுக்கு பிடிச்ச பொம்மை இருந்தது.

அது அவங்க அப்பா அவளுக்காக வாங்கி வச்சாங்களா, இல்ல கிருஸ்துமஸ் தாத்தா குடுத்தாங்களா?

ஷிவானி தன்னோட கிப்ட்ட எடுத்துக்கிட்டு, பூஞ்சிட்டு குழந்தைகளோட க்யூட் வீடியோஸ் பார்க்க கிளம்பி போறா..

டாட்டா, பட்டூஸ் அடுத்த இதழ்ல ஷிவானிய பார்க்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments