காக்கா நல்ல காக்கா
கருமை நிறக் காக்கா
கரைந் துண்ணும் காக்கா
கூடி வாழும் காக்கா
கம்பிக் கூடு கட்டிடும்
கழிவுகளைத் தின்றிடும்
சூழல் தனைக் காத்திடும்
அண்டி நம்மை வாழ்ந்திடும்
அன்னம் நிதமும் அளித்தே
அன்பைக் காட்டு பாப்பா
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.