வணக்கம் செல்லங்களே!

பொங்கலோ பொங்கலை மகிழ்ச்சி பொங்க கொண்டாடினீங்களா? பொங்கல் சாப்பிட்டீங்களா? நம் வாழ்விற்கு ஆதாரமான உணவைத்தரும் விவசாயத்தைக் கொண்டாட, விவசாயிகளின் காப்பான் சூரியனுக்கு நன்றி சொல்லவும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டாக பல நூறு வருடங்களாக இருந்து வந்துள்ளது.

கிறிஸ்துமஸ் போட்டியில் வென்ற குட்டிகளுக்கு பூஞ்சிட்டு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் பரிசு உங்கள் வீடு தேடி வந்தடையும்!

இந்த பொங்கல் திருநாள் சிறப்பு இதழில் உங்களுக்குப் பிடித்த பகுதிகளைப் படித்து மகிழுங்கள். எங்கள் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள்!

வாங்க! தமிழோடு சிறகடித்துப் பறக்கலாம்!!

-பூஞ்சிட்டு குழு.

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments