செல்லச் சிட்டுகளே!  இம்மாதம், உங்களுக்கு அறிமுகப்படுத்தும் குருவியின் பெயர், தேன்சிட்டு (Sunbird).

Sunbird

உலகத்திலேயே மிகவும் சிறிய பறவை, ஹம்மிங் பறவை (Humming bird) என்று உங்களுக்குத் தெரியுமா? அது அமெரிக்காவைச் சேர்ந்தது.  நம்மூர் தேன் சிட்டு, அந்தப் பறவையினத்தைச் சேர்ந்தது.  சிட்டுக்குருவியை விட உருவத்தில் சிறியது. 

இவற்றில்,.  ஊதா தேன்சிட்டு (Purple Sunbird), ஊர் தேன்சிட்டு (Purple-rumped Sunbird) .என இரண்டு வகை இருக்கின்றன.  பூக்களில் உள்ள தேன் தான் இதன் முக்கிய உணவு.  எனவே பூக்களுக்குள் அலகை விட்டுத் தேனை உறிஞ்சுவதற்கு வசதியாக இதன் அலகு மெலிதாக நீண்டும், வளைந்தும் காணப்படும். தேனைத் தவிர, சிலந்தி உட்பட, சிறு பூச்சிகளையும் இது உண்ணும்.  வளைந்து நீண்ட இதன் அலகை வைத்து, எளிதாய் இதனை அடையாளம் காணலாம்.

நம் தோட்டங்களில் அடிக்கடிக் காணக்கூடிய குருவி. முருங்கை  பூக்களில் உள்ள தேனைக் குடிக்க அடிக்கடி வரும். இது தேனை உறிஞ்சும் போது இதன் அலகுகளில் பூக்களின் மகரந்தம் ஒட்டிக் கொள்ளும். பல செடிகளுக்கும், மரங்களுக்கும் சென்று, தேனை உறிஞ்சுவதால், மகரந்தச்சேர்க்கை நடப்பதற்குப் பெரிதும் உதவுகின்றது. 

ஆண் குருவியின் சிறகுகள், கருமை கலந்த ஊதா, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் பளபளப்பாகக் காணப்படும்.  வெயிலில், ஆண் குருவியின் ஊதா நிறம், பளபளவென்று மின்னும்.  பெண் குருவி, வெளிர் பழுப்பு, மஞ்சள் நிறங்களில் காணப்படும்.

இந்தக் குருவியைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டால், மறக்காமல் எங்களுக்கு எழுதுங்கள்.

எழுத வேண்டிய முகவரி:- feedback@poonchittu.com

What’s your Reaction?
+1
2
+1
6
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments