அணில் பாரு, அணில் பாரு,
கனி பறிச்சிக் கொறிக்குது!
ஆனை பாரு, ஆனை பாரு,
ஆடி அசைஞ்சி போகுது!
மான் பாரு, மான் பாரு
புல் வெளியில் மேயுது!
மயில் பாரு, மயில் பாரு,
முகில் கண்டு ஆடுது!
குயில் பாரு, குயில் பாரு,
குரலி னிமை மயக்குது!
முயல் பாரு, முயல் பாரு,
தாவிக் குதிச்சி ஓடுது!
சேவல் பாரு, சேவல் பாரு,
கூவி நம்மை எழுப்புது!
சிட்டு பாரு, சிட்டு பாரு,
சிறகடிச்சிப் பறக்குது!!