குழந்தைகளா, எல்லோரும் எப்படி இருக்கீங்க? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – இந்த பழமொழி எல்லோருக்கும் தெரியும் தானே. இப்போ, நாம் உருளைக் கிழங்கை வைத்து அழகிய ஓவியங்களை உருவாக்கலாமா ?

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு

அக்ரிலிக் அல்லது டெம்பரா வண்ணங்கள்.

செய்முறை :

உங்கள் உருளைக் கிழங்கை பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது, வெட்டிய கிழங்கின் ஒரு பாதியில் வண்ணம் தீட்டிக் கொள்ளுங்கள். அல்லது, பாதி உருளைக் கிழங்கை வண்ணத்தில் தோய்த்துக் கொள்ளுங்கள்.

வண்ணம் தீட்டிய பாதியை, உங்கள் காகிதத்தில் அல்லது ஏட்டில், நன்கு அழுத்தவும். நீங்கள் உருளைக்கிழங்கில் தீட்டிய வண்ணமானது, அப்படியே உங்கள் ஏட்டில் பதிந்து விடும். இப்போது, அந்த அச்சினை, பல்வேறு உயிரினங்கள், பழங்கள் போல் உருவாக்கிடலாம். இந்த அச்சுப் பதித்தலின் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாமா?

என்ன குழந்தைகளே, இந்த அச்சுப் பதித்தல் ஓவிய முறை உங்களுக்கு பிடித்திருக்கா? முயற்சித்துப் பார்த்து, உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments