
பலூன் பறக்குது பலூன் பறக்குது
பருந்து போல வானில் மிதக்குது
பச்சை, மஞ்சள், ஊதா என்றே
பலப்பல வண்ணம் கண்ணைப் பறிக்குது
பலூன் பறக்குது பலூன் பறக்குது
பறந்து பறந்து உயரம் ஏறுது
வரிசையில் நின்று ஊர்வலம் போகுது
விண்ணைத் தொட விரைவாய் ஓடுது
பலூன் பறக்குது பலூன் பறக்குது
உள்ளே உள்ள காற்று இயக்குது
காற்று நிறைந்தால் மேலே எகிருது
கண்ணுக் கழகாய் காட்சி தெரியுது
காற்றுள்ள பலூன் மேலே போகுது
ஓட்டை பலூன் கீழே விழுகுது
உள்ளத்தில் நிரப்பிடு உயர் எண்ணம்
வானமும் உந்தன் வசமாகும்