aayisha FrontImage 735

ஆயிஷா – குறுநாவல்

ஆசிரியர் –  இரா.நடராசன்

வெளியீடு:- பாரதி புத்தகாலயம், சென்னை. (+91 8778073949)

விலை – ₹14/-.

இக்குறுநாவல் ஒரு அறிவியல் நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை போல் அமைந்துள்ளது.  திண்டிவனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே சோதனைச் சாலையாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.  இந்த உண்மை சம்பவமே இக்கதையின் அடிப்படை.

அறிவியலின் அடிப்படையே ஏன், எதற்கு? என்று கேள்வி கேட்டு, அதற்கான விடைகளைக் கண்டுபிடிப்பதில் தானே அடங்கியுள்ளது?.  ஆனால் நம் கல்விமுறை, கேள்வி கேட்க மாணவர்களை அனுமதிப்பதில்லை.  கொடுத்திருக்கும் பாடத்தை, மனப்பாடம் பண்ணி தேர்வுத் தாளில் வாந்தியெடுப்பது மட்டுமே, அவர்களுடைய வேலை. எனவே அடிக்கடிச் சந்தேகம் கேட்கும் மாணவி ஆயிஷா வகுப்பு ஆசிரியருக்குப் பிரச்சினை ஆகின்றாள்      

நம் மனப்பாடக் கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனையை விதைத்துப் பரவலான கவனத்தை ஏற்படுத்திய விதத்தில், ஆயிஷா மிக முக்கியமான புத்தகம். இது வெளியான பிறகு, ஆசிரியரின் பெயரில் , ஆயிஷா அடையாளமாகச் சேர்ந்து ‘ஆயிஷா நடராசன்’ என்றாகிவிட்டது.

1995 ஆம் ஆண்டு கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில், வெற்றி பெற்ற இக்குறுநாவல், ஒரு லட்சத்துக்கும் மேல் பிரதிகள் விற்பனை, எட்டு மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு எனப் பல சாதனைகளைப் படைத்துள்ளது.

20 பக்கங்களே கொண்ட இக்குறுநாவலை, அவசியம் அனைவரும் குறிப்பாகக் கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும் வாசிக்க வேண்டும்.

https://www.commonfolks.in/books/d/aayisha

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments