சாலுவின் ப்ளுபெர்ரி

BLUE BERRIES FOR SAL – ROBERT McCLOSKEY

தமிழில் – கொ.மா.கோ.இளங்கோ

புக்ஸ் ஃபார் சில்ரன் – விலை ₹ 30/-

தமிழ், ஆங்கிலம் இரு மொழியிலும் வாசிக்கும் வசதியுண்டு.  ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான படங்களோடு கூடிய மொழிபெயர்ப்புக் கதை. தமிழாக்கம் செய்திருப்பவர் சிறார் எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ.

சிறுமி சால், தன் அம்மாவோடு, ப்ளூ பெர்ரி பழங்கள் பறித்து வர, மலைக்குச் செல்கிறாள். வழியில்  பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே வருபவள், ஒரு கட்டத்தில், அம்மாவிடமிருந்து பிரிந்து விடுகின்றாள். 

அதே மலைக்கு பெர்ரி பழங்களைத் தின்ன கரடி ஒன்றும், அதன் குட்டியும் வருகின்றன.  பழங்களைத் தின்று கொண்டே வரும் கரடிக்குட்டியும், தன் அம்மாவிடமிருந்து, பிரிந்துவிடுகின்றது.   அம்மாவிடமிருந்து பிரிந்த  சிறுமி, மீண்டும் அம்மாவோடு இணைந்தாளா?  கரடி தன் குட்டியைக் கண்டுபிடித்ததா? என்பதைத் தெரிந்து கொள்ள, இப்புத்தகத்தை வாங்கிக் குழந்தைக்கு வாசித்துக் காட்டுங்கள்.

https://www.panuval.com/saluvin-blueberry-10008959

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *