ஊத ஊத உப்புமாம்
உப்பி உப்பிப் பறக்குமாம்
உருண்டையாக இருக்குமாம்
உள்ளே காற்றைச் சுமக்குமாம்
பட்டுப்போல மென்மையாம்
பளபளப்பாய் இருக்குமாம்
அசைந்து மெல்ல நகருமாம்
அழகுக் கோலம் காட்டுமாம்
காற்றின் போக்கில் மிதக்குமாம்
காண்பவரை ஈர்க்குமாம்
வட்ட வட்டக் குமிழிகள்
வண்ணஜாலம் காட்டுமாம்
கிட்டக் கிட்ட வந்திடுமாம்
எட்டி எட்டிச் சென்றிடுமாம்
சுட்டுவிரலால் தொட்டுவிட்டால்
பட்டென உடைந்து மறைந்திடுமாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1