இதன் உடல் நிறம் வெள்ளை; அலகின் நிறம் மஞ்சள். இனப்பெருக்கக் காலத்தில் இதன் தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில், மஞ்சள் நிற இறகுகள் காணப்படும்.

இது தமிழ்நாடு முழுக்கப் பரவலாகக் காணப்படும் பறவை. பெரும்பாலும் ஆடு, மாடு மேயும் இடங்களில், இது சிறு கூட்டமாகக் காணப்படும். இதை வைத்து, இந்தக் கொக்கை எளிதில் அடையாளம் காணலாம்.
ஆடு,மாடுகள் புல்வெளியில் மேயும் போது, புல்லிலிருந்து வெளிப்படும் புழு,பூச்சி, வெட்டுக்கிளி, தத்துக்கிளி போன்றவற்றைப் பிடித்துத் தின்னும். இது மட்டுமின்றி, ஆடு, மாடுகளின் உடலில் ஒட்டிக்கொண்டு, அவற்றின் இரத்தத்தை உறிஞ்சும் உண்ணியையும், இது பிடித்துத் தின்னும்.
நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீர்க்காகம், கொக்கு ஆகியவற்றோடு கலந்து மரங்களில் கூடமைத்து 3 முதல் 5 முட்டைகள் இடும்.
குழந்தைகளே! இந்தக் கொக்கை நீங்கள் பார்த்து அடையாளம் கண்டால், மறக்காமல் எங்களுக்கு எழுதுங்கள்.
எழுத வேண்டிய முகவரி:- feedback@poonchittu.com