எல்லோர் வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலும் பரவலாக இருக்கும் ஒரு பொருள் தோசை மாவு. அனைத்து கடைகளிலும் கூட தோசை மாவு பாக்கெட்டில் கிடைக்கிறது. இந்த தோசையை கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு சாப்பிடலாமா?
தேவையான பொருட்கள்:
- சற்று கெட்டியான தோசை மாவு – ஒரு கப்
- நறுக்கிய வெங்காயம்
- சாஸ் அல்லது சட்னி
- கொத்தமல்லி
- எண்ணெய்
- சீவிய சீஸ் – அரை கப்
செய்முறை:
- வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
- அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மிதமாக சூடேற்றிக் கொள்ளவும்
- தோசை மாவை எப்போதும் தோசை சுடுவது போல வட்டமாக ஊற்றிக் கொள்ளவும்
- தோசை பாதி வெந்தவுடன் அதன் மீது வெங்காயத்தை பரப்பி முழுவதற்கும் சாஸ் -உம் தடவிக் கொள்ளவும்
- தோசையை சுற்றி எண்ணெய் விட்டு ஒரு மூடியால் சிறிது நேரம் மூடி வைக்கவும்.
- வெங்காயம் சிறிது வெந்தவுடன் திறக்கவும்
- கொத்தமல்லியை தூவி மொருமொருப்பாகும் வரை விடவும்
- இப்போது சீவிய சீஸ் எடுத்து தோசை மேல் பரப்பவும்
- சீஸ் விரைவாக உருகும். அடுப்பை அணைத்து விடவும்.
- தோசையை மடித்து பரிமாறவும்
சீஸ் தோசை தயார். வீட்டுல செஞ்சு பாத்து எப்படி இருந்தது என்று கமெண்ட் செய்யுங்க.
தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்த நாள்முதல் வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் என் உற்ற துணையாய் இருப்பது புத்தகங்களே.. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்தில் விழுந்த வித்துதான் இந்த மின்னிதழ். இது தளிராய் வளர்ந்து விருட்சமாய் மாறி, நம்தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும்.