ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஒரு அழகான தீவில் ஒரு துறவி இருந்தார் . அந்த துறவிக்கு தங்கும் இடம் ஓன்றும் இல்லை . அவரிடம் சொத்து , பணம் , காசு ,நிலம் என்று எதுவமே கிடையாது .
அவரது உடமைககள் என்பது , அவர் அணிந்திருக்கும் உடையும் , தன் கையில் வைத்து இருக்கும் ஒரு மூட்டையும் தான் .
துறவியோ நாடோடி மாதிரி தான் தன் வாழ்க்கையைக் நடத்தி வந்தார் . துறவியோ , ஒவ்வோரு ஊராக சென்று அங்கு குகையிலோ தவம் புரிவார் . 10 அல்லது 15 நாட்கள் ஒரு ஊரில் இருப்பார் . பின்னர் , வேறு ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் . இந்த துறவிக்கோ ஒரு சிறப்பம்சம் உண்டு . யாரேனும் இந்த துறவியிடம் சென்று தன் கஷ்டங்களை சொன்னார்கள் என்றால் , அதற்கான தீர்வினை இந்த துறவியோ கூறுவார் . இவர் கூறிய தீர்வினால் பல மனிதர்களின் வாழ்வில் முன்னேற்றங்களை கண்டனர் .
தாங்க முடியாத கஷ்ட்டங்களோடு யாரேனும் துறவியிடம் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு தான் மூடையில் இருந்து . துணிமணிகள் , பழங்கள் , பொன் நகைகள் , புத்தகங்கள் இந்த மாதிரியான பொருட்களை கொடுப்பார் .
இந்த துறவியின் சிறப்பம்சங்கள் அந்த தீவு முழுவதும் வெகு விரைவாக பரவியது. எந்த கிராமத்திற்கு சென்றாலும் ஒரு மக்கள் கூட்டம் அந்த துறவியை காண செல்வார்கள் . தன் குறைகளை , தன் கஷ்டங்களை குறி அதற்க்கான தீர்வினை பெறுவார்கள் .
ஒருநாள் , கிராமத்திற்கு அந்த துறவி சென்றார் . அங்கு சென்று ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்து தவம் செய்ய ஆரம்பித்தார் . அந்த கிராமத்திற்கு துறவி வருகை புரிந்தது அங்கு இருக்கும் மக்களுக்கு காட்டுத்தீ போல் பரவதொடங்கியது . அங்கு சென்று கிராம மக்கள் துறவியிடம் தன் கஷ்டங்களை கூறி அதற்கான தீர்வினை பெற்று மனமகிழ்வோடு வீடு திரும்பினர் .
துறவியோ , எப்பொழுதும் போல சிலருக்கு தீர்வு சொன்னார் . சிலருக்கோ தான் வைத்து இருக்கும் மூட்டையில் இருந்து பொருட்களை எடுத்து கொடுத்தார்.
ஒரு நாள் வியாபாரி ஒருவர் துறவியை காண சென்று. ,தன் தொழிலில் நஷ்டம். ஏற்பட்டதையும் அதனால் ஏற்பட்ட மிகுந்த மன உளைச்சலையும் அழுது கொண்டே கூறினார் . இதனை கேட்ட துறவியோ தன் கையில் உள்ள மூட்டையில் இருந்து ஒரு மரப்பெட்டியை எடுத்து அந்த வியாபாரியிடம் கொடுத்தார் .
இதில், நான்கு ரகசியம் இருக்கிறதுஇந்த மரப்பெட்டியை வீட்டில் சென்று தான் திறக்க வேண்டும் என்று கூறினார் துறவி .
வியாபாரியோ , மன மகிழ்ச்சியோடு மரப்பெட்டியை எடுத்துக்கொண்டு துறவியிடம் இருந்தது விடைப்பெற்றர்.அந்த மரப்பெட்டியை பூஜை அறையில் வைத்து திறந்து பார்த்தார் வியாபாரி.
அந்த பெட்டியில் ஒரு மணி , ஒரு ரூபாய் நாணயம், சிப்பி மற்றும் முத்து என நான்கு பொருட்கள் இருந்தது . இதனை கண்டவுடன் வியாபாரிக்கோ ஒன்றுமே புரியவில்லை .ஆனால் , இந்த பெட்டியில் ரகசியம் என்று கூறினாரே துறவி என்ற ஆழ்ந்த சிந்தனையுடன் வியாபாரி இரவு தூங்கவில்லை .
மறுநாள் காலையில் அந்த வியாபாரி , துறவியை காண அவர் வசிக்கும் இடத்திற்கு அந்த மரப்பெட்டியை எடுத்து கொண்டு வந்தார். வியாபாரி , அந்த மரப்பெட்டியை திறந்து துறவியின் முன்னாள் வைத்துவிட்டு பின்னர் , இதில் நான்கு பொருள்கள் இருக்கிறது . எந்த நான்கு பொருள்களும் நான்கு ரகசியத்தை கூறும் என்று சொன்னிர்கள் . ஆனால் , ஒன்றுமே என்னக்கு புரியவில்லை என்றார் வியாபாரி .
துறவியிடம் கேட்ட உடன் துறவியோ புன்னகை செய்தார் . ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் நீ சொன்னபடி சிலர் தன் கஷ்டங்களை என்னிடம் கூறுவது வழக்கம் . நானும் அவர்களுக்கு உனக்கு கொடுத்த மாதிரியே மரப்பெட்டியை அவர்களுக்கும் கொடுப்பேன் . ஆனால் , இதுவரை என்கிட்ட யாருமே திருப்பி வந்து கொடுத்ததில்லை.
ஆனால் , நீ மட்டும் தான் இந்த மரப்பெட்டியுடன் திரும்பி வந்திருக்கின்றாய் . அதனால் , இந்த நான்கு ரகசியத்தையும் சொல்லுகின்றேன் நன்றாகக்கேள், மணி – நேரத்தையும், ஒருரூபாய்நாணயம் – பணத்தையும், சிப்பி மற்றும் முத்து -வார்த்தைகளையும் குறிக்கும் .
எவன் ஒருவன் தன் நேரத்தை சரியாக கையாளுகின்றானோ , அவன் ஒருவனே தன் வாழ்க்கையையும் சரியாக கையாளுகின்றான் .
எவன் ஒருவன் தன் செல்வத்தை செல்லவு செய்கிறானோ அவனிடம் இருந்து செல்வம் நீங்காது .
எவன் ஒருவன் தன் வார்த்தைகளை சரியான நேரத்தில் , சரியான நபரிடம் பயன்படுத்துகின்றானோ அவன் மட்டுமே தனக்கு கிடைக்கும் வெற்றியை தக்க வைத்து கொள்கிறான் .
நான்காவது ரகசியம் முதல் மூன்று ரகசியத்தையும் கேட்டால் மட்டும் போதாது இதனை வாழ்வில் செயல்படுத்தினால் மட்டும் தான் வெற்றி கிடைக்கும் .
இன்று இதை வாசிக்கின்ற நாமும் நேரம் , பணம் , வார்த்தைகள் இவை மூன்றையும் சரியாக பயன்படுத்தி நம் வாழ்விலும் வெற்றி என்னும் கனியை பெறுவோம் .
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர். பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம்.
கீழ்ப்பட்டமுடையார்புரம் ,தென்காசி மாவட்டம்