என்னை வைத்து

கப்பல் செய்யலாம்!

கவிதை எழுதலாம்!

கணிதம் போடலாம்!

கல்வி கற்கலாம்!

நான் யார்?

பிண்டு, “என்ன குட்டீஸ்? பதில் கண்டுபிடித்துவிட்டீர்களா?”

“நான் கண்டுபிடிச்சுட்டேன் பிண்டு. காகிதம் தானே அது!” என்று துள்ளி குதித்தாள் அனு.

“ஆமாம் அனு, மிகச்சரி! இந்த காகிதப் எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று உனக்குத் தெரியுமா?”

“பதில் தெரியாது பிண்டு, ஆனால் கேள்விகள் கேட்கத் தெரியும். நான் ஒவ்வொரு கேள்வியாய் கேட்பேனாம் நீ பதில் சொல்லுவியாம்!” என்று அனு கூற, பிண்டு தலையாட்டியது.

  1. பேப்பர் பெயர் காரணம்?

முதன்முதலில் எகிப்தில் பேபிரஸ்(papyrus) என்னும் தாவரப் பட்டையில் எழுதினார்கள். அதனால் அதன் பெயர் பேப்பர் என்றானது.

  • காகிதத்தைக் கண்டுபிடித்தது யார்?

 எகிப்தில் பேபிரஸ்ஸில் எழுதினாலும், சீனர்கள் தான் முதல்முதலில் காகிதம் தயாரித்து எழுதத் தொடங்கினார்கள்.

  • காகிதம் எதிலிருந்து தயரிக்கப்படுகிறது?

மரப்பட்டை, மரத்தில் உள்ள செல்லுலோஸ்(cellulose), மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்கள், பழைய துணி மற்றும் சில தாவரங்கள்.

“பிண்டு! கேள்வி எல்லாம் போதும், இப்ப நான் எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன் அதை எல்லாரும் கேட்கட்டும்!” என்று கோரிக்கை வைத்துவிட்டு பேச ஆரம்பித்தாள் அனு.

பூஞ்சிட்டு நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா?

உலகெங்கிலும் தினமும் காகிதம் தயார் செய்வதற்கு சுமார் 80,000 ஏக்கர் காடுகள் அழிகிப்படுகின்றன. ஒரு கிலோ காகிதம் தயார் செய்ய 324 லிட்டர் தண்ணீரும், ஒரு டன் காகிதத்திற்கு 380 கேலன் ( 1 கேலன் = 3.7 லிட்டர்) எண்ணெயும் தேவைப்படுகின்றன.

“ஆமாம் குட்டீஸ்! பேப்பர் தயாரிக்க எவ்வளவு பொருட்கள் செலவாகின்றன என்று பார்த்தீர்களா! எனவே காகிதத்தை அளவோடு உபயோகிக்க வேண்டும். முடிந்தவரை அதன் உபயோகத்தைக் குறைக்க வேண்டும்” என்றது பிண்டு.

“அடுத்த மாதம் வேற ஒரு புது விஷயத்தோட வரோம்! பை! பை! உங்கள் பிண்டு மற்றும் அனு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *