
இயந்திரப் பறவை ஒன்று
இங்கே வானில் பறக்கிறது!
பயணிகளைச் சுமந்துகொண்டு
பரதேசம் செல்கிறதே!
விர்ரென்று வானில் வேகமாகக்
காற்றைக் கிழித்துப் பறக்குதே!
மேகங்களில் புகுந்து மறைந்து
விளையாடிப் போகிறதே!
அறிவியலின் அறிமுகமே
மனிதன் படைத்த அற்புதமே!
பயணத்தை எளிதாக்கி
நேரத்தைக் குறைக்கிறதே!
அறிவியலின் வளர்ச்சியில்
நாமும் பங்கு கொள்வோமா?
நாளை மலரும் புதுவுலகில்
நமக்கு உதவும் புதுமைகளை
கண்டுபிடிக்க வாருங்கள்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!