ஆசிரியர் : ஜோஹன்னா ஸ்பைரி

பக்கம்: 140

விலை : ₹99

பப்ளிஷர்ஸ்: Nestling book publishing

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் தனது தந்தை வழி உறவினரின் பராமரிப்பில் வாழும் ஐந்து வயது சிறுமியின் வாழ்வில் நடைபெறுவதாக எழுதப்பட்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அலாதியான அனுபவங்களைத் தரவல்லவை. குழந்தைகளுக்காக மட்டுமின்றி குழந்தைகளை நேசிப்பவர்களுக்காகவும், இயற்கையை விரும்பும் அனைவருக்குமானது படைப்பு. ஸ்வீஸ் குழந்தை ஒன்றின் சிறு வயது வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கும் மலைகள், புல்வெளிகள், பூக்கள், பூனைகள், ஆட்டுக்குட்டிகள், அன்பே உருவான தாத்தா, பாட்டி, தோழி, நண்பன் என நிறைந்த நிஜமான அழகம்சங்கள் நாவல் முழுவதும் உலா வருகின்றன.

சிறார்களுக்கான வேர்ல்ட் கிளாசிக் நூல் வரிசையில் ஹைடியும் ஒன்று. 1881 ஆம் ஆண்டு சுவிஸ் எழுத்தாளர் ஜோஹன்னா ஸ்பைரியால் வெளியிடப்பட்ட இந்நாவல் உலகின் தலைசிறந்த சிறார் படைப்புகளில் ஒன்றாகும். இதை தமிழில் அ.வானதி மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இந்தக் கதை தற்போது டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனக்காயங்களை பற்றியும் இந்நூல் பேசுகிறது. நடக்க முடியாத கிளாராவுக்கு ஹைடி தோழமை எந்தளவுக்கு ஆறுதல் அளிக்கிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. அழகான கதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *