குட்டிச் செடி

(மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள்)

தமிழாக்கம்: ஞா.கலையரசி

வெளியீடு:-  பாரதி பதிப்பகம், சென்னை—92 செல் +91 9383982930

விலை:-ரூ 85/-

இதில் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 10 சிறுவர் கதைகள் உள்ளன. ‘ஒரு நாள் இந்த மரத்திலிருந்து, உன்னைப் பிடுங்கித் தரையில் எறிந்து விடுவேன்’ என்று காற்று சொன்னதைக் கேட்டுப் பயந்து அழும் ஓர் இலையின் கவலையை முதல் கதை சொல்கிறது.

நிரபராதியான ஒரு கைதியின் சிறை வாழ்வில் மலர்ச்சி ஏற்பட ஒரு குட்டிச் செடி எப்படிக் காரணமாக இருக்கின்றது என்பதைக் ‘குட்டிச்செடி’ என்ற கதை நெகிழ்ச்சியாகச் சொல்கிறது.

இளவரசி நடக்கும் இடம் எங்கும் பூக்கள் பூத்ததன் இரகசியத்தை மந்திரமலை கதை சொல்கிறது. ஒரே ஒரு ராபின் குருவியின் பாடல் மட்டும், மிக மிக இனிமையாய் இருந்தது எப்படி? காட்டில் வெட்டப்பட்டு, நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பைன் மரத்தின் பல்வேறு அனுபவங்கள் யாவை? உடல்நலமில்லாமல் இருந்த குழந்தையைக் குணப்படுத்திய அல்லிப்பூ, முடிவில் என்னவாக மாறியது? போன்ற சுவாரசியமான பல கேள்விகளுக்கு விடை தெரிய, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள். 6-12 வயது குழந்தைகளுக்கு ஏற்ற கதைப்புத்தகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *