குழந்தைகளே, இன்றைக்கு நாம் அழகிய முயல் செய்யலாமா?

தேவையான பொருட்கள்:
- முட்டை ஓடு
- மெல்லிய அட்டை
- அக்ரிலிக் வண்ணங்கள்
- பசை
முட்டையின் மேல் பகுதியில் மட்டும், சிறியதாக உடைத்து, உள்ளிருப்பவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக, முட்டை ஓட்டினை, நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். விரும்பினால், சுத்தம் செய்த முட்டை ஓட்டை, சிறிது நேரம் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்தால், முட்டை ஓடு, சற்று உறுதியாக மாறும். கையாளவும் எளிதாக இருக்கும்.
முட்டை ஓட்டில், வண்ணம் தீட்டுங்கள். அடுத்ததாக, முயலின் காதுகள் மற்றும் பாதங்களை அட்டையில் வரைந்து, பசை கொண்டு ஓட்டவும். முயலின் கண்கள் மற்றும் வாய் பகுதிகளை ஸ்கெட்ச் பேனா கொண்டு வரையவும்.
அழகிய முயல் தயார்.
– பி. தமிழ் முகில்