மழையே மழையே வாவா!
மகிழ்ச்சி எமக்குத் தாதா!
வெயிலின் அதிகக் கடுமையால்
விளையாட முடியவில்லை!
வாடி நிற்கும் செடிகள் கண்டு
வருந்தி நாங்கள் துடிக்கிறோம்!
காற்றில் ஜிலுஜிலுப்பு இல்லை
நெருப்பாகவே தகிக்கிறது!
உடலெல்லாம் எரிகிறது!
உணவு கூடப் பிடிக்கவில்லை!
கருப்பான பல மேகங்கள்
கலைந்து எங்கே செல்கின்றன?
விரைவில் நீ கருணை காட்டு!
மேகங்களைத் தூதனுப்பு!
இடியுடன் மின்னலை அனுப்பிவை!
இதயங்களைக் குளிர வை!
மழைத்துளி மண்ணில் விழட்டுமே!
மனங்களுமே களிக்கட்டுமே!
புவனா சந்திரசேகரன்.
