வணக்கம் பூஞ்சிட்டுக்களே!

ஒவ்வொரு  மாதமும்  இந்தப்  பகுதில, நமக்குப் பிடிச்ச குழந்தைகள் நூல்களைப் பத்தியும்,    தொலைக்காட்சித்  தொடர்களைப் பத்தியும் புதுசா என்னென்ன படைப்புகள் வெளிவந்திருக்கு, எந்த வயது குழந்தைகளுக்கான படைப்புகள்ன்னு எல்லா விவரங்களைப் பத்தியும்  அலசப்போறோம்.

என்ன நிகழ்ச்சி:  பொம்மியும் திருக்குறளும்

எங்க பார்க்கலாம்: சுட்டி டிவி மற்றும் யூட்யூப் தளத்தில்.

யார் யார் பார்க்கலாம்: மூன்று வயது குழந்தைகள்ல இருந்து  பெரிய குழந்தைகளும் பார்க்கலாம். பெரியவங்களும் கூட பார்க்கலாம்.

எதுக்குப் பார்க்கணும்: ஆழமான திருக்குறள் வரிகளை ரொம்ப இயல்பா விளையாட்டுப் போக்குல குழந்தைகளுக்குச் சொல்றதால, சின்ன வயசுல இருந்தே குறள்களைப் புரிஞ்சுக்கவும், அந்தக் குறள் நம்ம மனசுல ஆழமாப் பதியவும் வைக்குது.

எவ்வளவு நேரம் பார்க்கணும்:  எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியானாலும் சரி தொடர்ந்து இருபதுநிமிடத்திற்கு மேலப் பார்த்தா, நம்ம கண்களுக்கு பெரும் கெடுதியை நாமே செய்றது போல.

அதனால எவ்வளவுக்கு எவ்வளவு நம்ம திரை நேரத்தைக் குறைக்கிறமோ, அவ்வளவும் நமக்கு ரொம்ப நல்லது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments