வணக்கம் குட்டீஸ்!
பூஞ்சிட்டின் எட்டாவது இதழ் மூலமாக உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..
உங்களில் பலருக்குப் பள்ளிகளும் தொடங்கியிருப்பாங்க.. பல மாதங்கள் கழித்து தோழர் தோழிகளைப் பார்த்து சந்தோசத்தில் குதிச்சிருப்பீங்க..
மற்றவங்க அந்த நாளுக்காக ஏங்கிக் கிட்டு இருப்பீங்க.. கொரோனா காலம் முடிந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப தொடங்கி விட்டது.
சென்ற மாதப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற சுட்டிகளுக்கு வாழ்த்துக்கள்❤️.. உங்கள் திறமைகளை உலகறியச் செய்யும் எங்கள் முயற்சியில் தொடர்ந்து இணைந்திருங்க; பரிசுகளை அள்ளிக் செல்லுங்க..
நம் பூஞ்சிட்டு உங்களுக்குப் பிடித்த அனைத்துப் பகுதிகளோடும் வண்ணச் சிறகடித்துப் பறக்கிறது. படித்து மகிழுங்கள்💃💃
உங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு