அரிசி மாவு, கோதுமை மாவு எல்லாம் தெரியும் அது என்ன கலர் மாவுன்னு யோசிக்கிறீங்க தானே.. ப்ளே டோ – play dough ன்னு நீங்க எல்லாம் விளையாடுவீங்களே அதுக்கு நாம் வைச்சிருக்கிற பெயர்தான் கலர் மாவு.

கடையில் வாங்குகிற கலர் மாவு சின்ன டப்பாவில் கொஞ்சமா இருக்கும். விலை கம்மியா இருந்தா நல்லா இழுக்க வராது. விலை அதிகமாக வாங்கினாலும் ஒரு வாரத்தில் எல்லா கலரும் கலந்திட அம்மாகிட்ட திட்டு வாங்கனும்.

யோசிச்சிப் பாருங்க.. வீட்டிலேயே ப்ளே டோ செஞ்சா எப்படி இருக்கும்? கலர் கலரா.. வேண்டும்கிற வண்ணத்தில்.. விலை ரொம்பவே குறைவாக.. அத்துப்படி முடியும் னு கேக்கறீங்களா? இதோ.. இப்படித்தான்👇👇

தேவையான பொருட்கள்:

1.மைதா மாவு – 1கப்

2.தண்ணீர் -1/2கப்

3.எண்ணெய்- 4டீஸ்பூன்

4.Food colours- மஞ்சள், பச்சை, சிகப்பு, ஆரஞ்ச்(இன்னும் பல வண்ணங்களில் அருகிலிருக்கும் கடைகளில் கிடைக்கும். விலை- 1புட்டி 10லிருந்து 15ரூபாய் வரை)

ஒரு அகண்ட வாய் உள்ள கோப்பையில் மைதா மாவை எடுத்துக்கோங்க. அதில் கொஞ்சம்‌கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு மாதிரி பிசைஞ்சிக்கோங்க. மாவை நான்கு சம பகுதிகளாகப் பிரிச்சி, தட்டில் எடுத்துக்கோங்க.

நம் கோப்பையிலேயே சிறிதளவு கலர் பவுடரை எடுத்து அதில் இரண்டு மூன்று சொட்டு தண்ணீர் எடுத்து கலந்துக்கோங்க. பின் எடுத்து வைத்திருக்கும் ஒரு பகுதி மாவை அதில் வைத்து நல்லா பிசைங்க. மாவில் வண்ணம் சமமாகப் கலக்கும் படி அழுத்திப் பிசைந்த. அதன்பின் 4டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசைந்தால் மாவு உங்கள் கையில் ஒட்டவே ஒட்டாது.

இது போலவே ஒவ்வொரு பகுதி பாவிக்கும் ஒரு‌வண்ணம் கலந்து பல வண்ணங்களில் கலர் மாவு செய்து அதைக் கொண்டு பொம்மைகள் செய்து விளையாடலாம்..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments