வணக்கம் சிட்டுகளே🐦🐦

எல்லோரும் நலமா இருக்கீங்களா? கொரோனாவின் இரண்டாவது அலை🌊🌊யோடு நம் தேசமே போராடிக் கொண்டிருக்கிறது🏊🏊

சுட்டிக் குழந்தைகளான உங்கள் பள்ளி🏫 திறப்பு இன்னும் தள்ளிப் போயிருக்கிறது.. நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உடல் வேதனையும் மன வேதனையும் கண்டு களைப்பாயிருக்கிறதில்லையா? உங்களை விட சில வருடங்கள் இந்த பூமியில் அதிகம் வாழ்ந்த அனுபவத்தில் ஒன்றுதான் சொல்ல முடியும்.. “இதுவும் கடந்து போகும்⏳⏳”..

இந்த மாத பூஞ்சிட்டு இதழில் நிறைய கதைகள் இருக்கின்றன. உங்களைப் போல ஒரு சுட்டி👧 எழுதிய✍️ கதைத் தொடர் ,”நாலு கால் நண்பர்கள்🐇🐅🐘🦘 ஆரம்பமாகிறது. “சின்ன விசயம்”னு ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில்🏙️ வாழும் குழந்தைகளின் வால்தனங்களைச் சொல்லும் ஒரு சுட்டித் தொடரும் இந்த இதழிலிருந்து ஆரம்பமாகிறது.

உங்களுக்குப் பிடித்த நம் அனைத்துத் தொடர்களும் இந்த மாதமும் உங்கள் உள்ளத்தைக்💝 கொள்ளை💘 கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை. அனைத்துப் பகுதிகளையும் படித்துப் பார்த்து உங்க கருத்துகளை 🗨️🗨️ எங்களுக்குச் சொல்லுங்க 📣📣.

உங்கள் நேரத்தையும் கற்பனையையும் பூஞ்சிட்டோடு பகிர்ந்து கொள்ளுங்கள்🐦🐦🐦

Title Page11
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments