குழந்தைகளே, இன்றைக்கு படங்களுக்கு வண்ணம் தீட்டுவதற்கு பதிலாக, காகித துண்டுகள் கொண்டு ஒட்டுவேலை முறையில் வண்ணம் தீட்டலாமா?
நான் இன்றைக்கு, ஒரு ஆப்பிள் வரைந்து, அதில், காகித ஒட்டு வேலை செய்து காண்பித்து இருக்கிறேன்.
காகிதங்களை ஒரே சீராகவும் வெட்டி ஒட்டு வேலை செய்யலாம். அல்லது, காகித துண்டுகளை சீரற்ற முறையில் கிழித்தும் ஒட்டு வேலை செய்யலாம். இப்படி சீரற்ற முறையில் ஒட்டுவேலை செய்ய, செய்தித் தாட்கள் நல்ல தேர்வாக இருக்கும்.
நான் கொலாஜ் முறையில் செய்த ஆப்பிள்.

முயற்சி செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் குழந்தைகளே.