வணக்கம் குழந்தைகளே!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் .

நம்மைப்போலவே நம் அடுத்தத்தலைமுறையும் அடிமைப்பட்டுப்போகக்கூடாது என்பதற்காக , இன்றைய தலைமுறையான  நமக்காக,

முன்னூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் சிக்கிக்கொண்டிருந்த இந்தியாவை, அன்றைக்கு எல்லா தடைகளையும் தாண்டி வலிகளைத்தாண்டி கால நேரம்   பார்க்காமல்,அன்றைக்கு நிலவிய அசாதாரணமான அரசியல் சூழலையும், கடுமையான அரசியல் எதிர்வினைகளையும் கண்டு அசராமல்,

 சுதந்திரக்கனவை நனவாக்க களத்தில் இருந்து போராடி, கணக்கில் அடங்காத எண்ணற்ற குடிமக்கள்,  வீரர்கள், தலை சிறந்த தியாகிகள், தலைவர்கள், என்று வருங்கால சந்ததிகளான நமக்காக  இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மீட்டு எடுத்தார்கள்.

இத்தனை மெனக்கெடலும் நமக்காகத்தான்.

நம் தேசம் நமக்கானது என்ற ஒற்றை சிந்தனையில் விளைந்ததே நமது சுதந்திரம்.

அதனால் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது என்று சொல்வதை விட,

75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை நாம எப்படி பாதுகாத்துக்கொண்டு இருக்கிறோம் என்று யோசித்து செயலாற்றுவதே நமது அடுத்த தலைமுறைக்கு நாம் அளிக்கும் பெரிய சொத்து.

Picture2 1

படம்: cxotoday.com

சாலைகளில் கண்களில் எதிர்ப்படும் குழந்தை தொழிலாளர்கள்,

பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகள்,

எச்சில் சுவர்கள், பிளாஸ்டிக் குப்பைகள், காய்ந்துக்கிடக்கும் நிலங்கள், வறண்டுக்கிடக்கும் ஆற்றுப்படுகைகள், தெருவோர வாசிகள் என ஒவ்வொரு நாளும் நம் வீட்டில் தொடங்கி வெளியே வரை நாம் பார்க்கும்  பொதுநலமற்ற ஆக்கங்களை , இதன் காரணிகளை வீட்டில் அம்மா அப்பாவிடம் வெளியே நண்பரிகளிடம் , பள்ளியில் ஆசிரியர்களிடம் நம் உறவினர்கள் பெரியவர்கள் என  அனைவரிடமும் இதைப்பற்றி நாம் பேச வேண்டும். அதிகம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம், விண்வெளித்துறையில் அளப்பரிய சாதனைகளை மேற்கொள்ளும் இஸ்ரோ, தகவல் தொழில்நுட்பம், வணிகத்துறைகளில் உலகமே வியக்க தலைசிறந்து இயங்கும் இந்திய மூளைகள், உலகில் எந்தெந்த மூலைகளில் இருந்தோ தேடி வந்து பயன்பெறும் அளவிற்கு  மிகவும் நுணுக்கமான கடினமான சிகிச்சைகளில் தன்னிகரின்றி செயல்படும் இந்திய மருத்துவத்துறை என நாம் சிறப்பாக செயலாற்றுகிறோம் . இன்னொரு பக்கம் நம் வீடுகளில் துவங்கி தெருக்கள், சாலைகள் ஊர்கள் என பொதுவெளியில் நிரம்பி வழியும் மக்கள்நலக்குறைபாடுள்,பிரிவினை பிளவுகள், அதனால் நிகழும் வன்முறைகள் என தினசரி நாம் எதிர்கொள்ளும் இந்த சமன்பாடின்மையை நாம் புரிந்து தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியம்.

Picture1 2

படம்:https://www.indiatoday.in/business/story/explained-how-a-raging-pandemic-is-widening-india-s-wealth-gap-1722726-2020-09-17

சுதந்திர தினத்தன்று மாறுவேடபோட்டியோடு நாம் நின்று விடக்கூடாது

சுதந்திர தினத்தன்று ஆவேசமாக பேச்சுப்போட்டி பேசி முடித்ததோடு நின்று விடக்கூடாது.

சுதந்திர தினத்தன்று மார்பில் தேசியக்கொடி குத்திக்கொள்வதோடு நாம் நின்று விடக்கூடாது.

சுதந்திர தினத்தன்று மிட்டாயோடு நாம் கிளம்பிவிடக்கூடாது.

சுதந்திர தினத்தன்று வருடாவருடம் தான் தேசப்பற்று வெளிவரும் என்று அசட்டுத்தனம் கூடாது.

சுதந்திர தினத்தன்று மட்டும் நமது தேசப்பற்று தணிந்துவிடக்கூடாது.

மாறாக,

நம் தெருவில், நம் ஊரில், நாம் தினம் கடந்து செல்லும் பேருந்து நிலையங்களில்  ரயில் நிலையங்களில், சாலைகளில்  கண்ணில் படும் சிறுசிறு விஷயங்களிலும் கவனித்து அதனை நம்மால் சரி செய்ய முடியுமா என்று யோசிக்க துவங்க வேண்டும். யோசிக்கத்துவங்குவதோடு மட்டுமல்லாமல் தகுந்த வழிகாட்டுதலோடு நல்ல முயற்சிய்களை நாம் மேற்கொள்ளவும் வேண்டும். இதுவே நமக்கும் நம் வருங்கால சந்ததியினருக்கும் ஆற்றும் நாம் மிகப்பெரியக்கடமை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments