டீனுவும் தோழிகளும் – 2

அதிதி! இப்போ நம்ம குட்டிக் குருவியோட கதையைத் தொடரப்  போகிறோம். குட்டி குருவியோட பள்ளிக்கூட சேட்டைகளைப் பற்றி பார்ப்போமா!!!!!.

ஒரு நாள் எப்பவும் போல அந்தக் குட்டிக் குருவி பள்ளிக்குச் சென்றது. டீனுவின் தோளில் அமர்ந்துகொண்டு ஜாலியாகச் சென்றது.  பள்ளிக்கூடம் போனபின் டீனுவின் தோழி அதிதி சாப்பாட்டு டப்பாவை யாருக்கும் தெரியாமல் இந்த குட்டிக்குருவி திறந்து அதிலிருந்த வடகம் அனைத்தையும் காலி செய்துவிட்டது. சாப்பிடும்போது இதை எல்லாரும் பார்த்துவிட்டுக் குட்டிக்குருவியின் மேல் மிகவும் கோபம் அடைந்தனர். உடனே குட்டிக் குருவி, “இங்கே வாருங்கள்! நான் ஒன்று காட்டுகிறேன்” என்று எல்லாரையும் கூட்டிக் கொண்டு சென்றது.

அங்கே இன்னொரு குட்டிக்குருவி காலில் சின்னதாக அடிபட்டு நடக்க முடியாமல் இருந்தது. அந்த குருவிக்காகத் தான் இந்த குட்டிக் குருவி வடகத்தை தன்னுடைய அலகால் ஒன்று ஒன்றாக எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்து சாப்பிடச் செய்ததாகச் சொன்னது. உடனே குட்டிக் குருவியின் செயலைப் பார்த்து அதிதி குட்டிக்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் ஆகிவிட்டது. அதனால் குட்டிக் குருவிக்குப் பொம்மிக்குட்டி என்று அதிதி பெயர் வைத்தாள். பிறகு அவளே பொம்மி குட்டியிடம் சொல்லி, “என் தாத்தா அடிபட்ட குருவிக்கு தேவையான மருந்து கொடுத்து அதை சரி செய்து விடுவார்கள்.

Healthy and diseased sparrow isolated on white background. Vector cartoon.

அதனால் நீ என் தாத்தாவிடம் அழைத்துப் போ” என்று கூறினாள்

பொம்மி குட்டியும் டீனுவும் பேருந்தில் ஏறித் தாத்தாவைப்

பார்க்கச் சென்றனர். பேருந்தில் இருந்த அனைவரும் பொம்மி குட்டியின் செயலைப் பாராட்டினர்.

இதன் தொடர்ச்சியை அடுத்த மாசம் பார்க்கலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *