குழந்தைகளே, ஐஸ்க்ரீம் குச்சிகளை வைத்து, அழகான பூனை செய்யலாமா?
இதற்கு தேவையான பொருட்கள்
ஐஸ்க்ரீம் குச்சிகள் – 3
பசை / கோந்து
ஸ்கெட்ச் பேனாக்கள் – கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்கள்
முதலில் உங்களுடைய மூன்று ஐஸ்க்ரீம் குச்சிகளையும் பாதியா வெட்டிக்கோங்க. இப்போ உங்களிடம் ஆறு துண்டுகள் இருக்கும். ஒரு துண்டில் மட்டும், வளைவுப் பகுதியையும் வெட்டிடுங்க
இப்போ, குச்சிகளைப் படத்தில் இருப்பது போல் அடுக்கிக்கோங்க.
அடுத்து, உடல் பகுதியின் பின்புறம், டேப் அல்லது சின்னதாக வெட்டிய ஐஸ்க்ரீம் குச்சியை வைத்து, மூன்று துண்டுகளையும் ஒன்றாக ஒட்ட வேண்டும்.
ஒட்டியபின் கண்கள், வாய், மூக்கு, காதுகள் அனைத்தையும் வரைந்து கொள்ள ஐஸ்க்ரீம் குச்சிகளால் ஆன பூனை தயார்.
பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். தற்சமயம் மணமாகி, கடந்த பத்து ஆண்டுகளாக வசிப்பது அமெரிக்கா. கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு”. பள்ளி நாட்களில் தொடங்கிய கவிதை வாசிக்கும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலோடு வளர்ந்து வருகிறது. வாசிக்க பிடித்திருந்தபடியால், எழுதிப் பார்க்க ஒரு ஆவலுடன் துவங்கிய எழுத்துப் பயணம், இன்று கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து வருகிறது.