அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த மலைகள் போல ஆட வேண்டும்

இதே வானிலே

இதே மண்ணிலே..

ல..லா.. ல..லா..

லா.. லால ல்லா.. லலா..

வணக்கம் பட்டுக்குட்டீஸ்!

என்ன பாட்டெல்லாம் பலமா இருக்குன்னு பாக்கறீங்களா..

நான் நிக்குற இடத்தை காட்டினா நீங்களும் இதே பாட்டு தான் பாடுவீங்க..

இதோ பாருங்க..

இது தான் லேக் தாஹோ Lake Taho அதாவது தாஹோ ஏரி. கலிபோர்னியாவோட புகழ்பெற்ற சுத்திப் பாக்குற இடங்கள்ல மிக மிக பிரபலமானது. ஏன்னா குளிரோ மழையோ வெயிலோ என்ன வானிலையா இருந்தாலும் சரி, அதுக்கேத்த மாதிரி அழகா காட்சி தர இந்த ஏரியும் அதை சுத்தின மலைகளும், பனிக்காலத்துல பனிச்சறுக்கு, வெயில் காலத்துல மீன் பிடி’ன்னு இங்க வந்தாலே நம்மள மாதிரி சுட்டீஸ்ல இருந்து பாட்டீஸ் வரைக்கும் நல்லா ஆட்டம் போடலாம்! அந்த அளவுக்கு மனசுக்கும் உடலுக்கும் நல்ல புத்துணர்ச்சி கொடுக்குற இடம் தான் தாஹோ ஏரி!

கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்ன ஐஸ் ஏஜ் காலத்துல உண்டானது தான் இந்த ஏரியாம். 6000 அடியிலே அமெரிக்காவிலேயே நீளமான ஆல்பைன் ஏரின்னும் சொல்றாங்க.

ஏரிய சுத்தி முக்கால்வாசி பகுதி சுற்றுலா தலம் ஆக்கப்பட்டதால கோடைக்காலத்துலயும் பனிக்காலத்துலயும் சும்மா ஜேஜேன்னு இருக்கும். இப்போ கூட பாருங்க மலைகளோட எவ்வளவு அழகா இருக்கு பாக்கறதுக்கு..

அப்படியே இங்கேயே ஒரு கூடாரம்  கட்டிப் படுத்துக்கலாம்ன்னு தோணுது! சரி இருங்க அதோ அந்த மரத்துக்கு பக்கத்துல ஒரு  குட்டி இடத்துல இடம் பிடிச்சு வைச்சுட்டு்வரேன்! ஊர விட்டு வந்தாலும் ஊர் பழக்கம் போகமாட்டேங்குது பாரு.’ங்கறீங்களா..

அதெல்லாம் அப்படிதான்..

ஹப்பா, நமக்குன்னு மெத்தை மாதிரி ஒரு இடம் பாத்து வைச்சிலுக்கேன். நாம இன்னும் ரெண்டு மூணு இடங்கள பாத்துட்டு ராத்திரிக்கு இங்க வந்துடலாம் சரியா.. 

இப்போ வாங்க போகலாம்!

எங்கூட நல்லா கெட்டியா பிடிச்சுக்கோங்க பசங்களா..

ஏன்னா நாம அடுத்துப் பாக்க போற இடம் இறங்கி பாக்குறத விட வானத்துல பறந்துக்கிட்டே பாத்தா சும்மா ஜில்லுன்னு இருக்கும்!

அப்படி என்ன இடம்ன்னு தானே யோசிக்கிறீங்க. அப்படியே யோசிச்சுக்கிட்டே கொஞ்சம் கீழப் பாருங்க. ..

இதுதான் மிகவும் புகழ்பெற்ற பிக் ஸர்! Big Sur மேற்குல பசிபிக் பெருங்கடலையும் கிழக்குல சாண்டா லூசியா மலைத்தொடர்க்கு இடையிலயும் அற்புதமா இயற்கையா அமைஞ்ச இந்தப் பகுதில இயற்கை அழகுக்குப் பஞ்சமேயில்ல!

மலையா கடலா காற்றா பாறையா அலையா வானிலையா எது ரொம்ப அழகுன்னு பட்டிமன்றமே நடத்தலாம் அப்படி அழகா இருக்குல்ல இந்த இடம்..

இருங்க ஒரே ஒரு பறவி எடுத்துக்கறேன். மனுஷங்க எடுத்தா செல்ஃபி.. என்னைப்போல பறவைங்க எடுத்தா பறவி தானே! முடியலல்ல? சரி, இத்தோட நிறுத்திக்கறேன்!

இதோ ஒரு கிளிக்..

அடுத்து நாம போகப்போற இடம் உங்க எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச இடம் தான்.

எஸ்! நம்ம கோல்டன் கேட் பிரிட்ஜ்

உடனே நம்ம பிரிட்ஜா நீயா கட்டின’ன்னு கேப்பீங்களே!

நான் கட்டல..  இர்விங் மர்ரோ தான்  1933ல கட்டினாரு.. இரும்புல கட்டப்பட்ட இந்த பாலம் கட்டின சமயத்துல உலகத்துலயே மிகப்பெரிய நீளமான பாலமா இருந்திருக்கு. இப்போ இது நவீன அதிசயங்களில் ஒண்ணா கருதப்படுதாம்! சான் பிரான்சிஸ்கோ வளைகுடாவையும் பசிபிக் பெருங்கடல் ஒரு பகுதியையும் போக்குவரத்துக்கு ஏற்ற மாதிரி நகரோட இரண்டு முனைகளை இணைக்கிற மாதிரி கட்டபட்ட இந்த பாலம்

பயணிக்கறதுக்கும் பறக்குறதுக்கும் கொள்ளை அழகா இருக்கும்..

ஆஹா என்ன காத்து.. பசிபிக் காத்து பிச்சு உதறுது.. அப்படியே இந்த காத்தோட காத்தாக உங்களுக்கு இன்னொரு இடத்த காட்டப்போறேன்..

பொதுவா மலை ஏரி ஆறு கடல் கட்டிடக்கலையான இடம் இதுதானே பாக்க பிரமிப்பா இருக்கும். ஆனா அடுத்து நீங்க பாக்கப்போற இடம் இதுல  எதுவுமே சேத்தி கிடையாது. அது ஒரு தெரு. அதுவும் உலகத்துலயே மிகவும் புகழ்பெற்ற தெரு. எந்த அளவுக்கு புகழ்ன்னா ஒரு நாளைக்கு 17000 பேர் அந்த தெருவ வேடிக்கை பாக்க வருவாங்களாம்!

அப்படி என்ன தெரு’ ன்னு தானே யோசிக்கறீங்க..

அது தான் லாம்பேர்ட் தெரு Lombard Street. உலகிலேயே மிக மிக குறுக்கான தெரு இது தான்.

இதோ பாருங்களேன்.

எட்டு ஹேர்பின் வளைவுகள் கொண்ட இந்த தெரு வடிவமைக்கப்பட்டப்போது  ஒரு மேடான மலைப்பகுதியா இருந்துச்சாம். வாகனம் ஓட்ட சிரமமான அளவுக்கு இருந்ததால அதை எளிதாக்க வளைவுகள் வடிவைச்சதால குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டதாம்.

இங்க நடக்கிறது, முகவரி கண்டுபிடிக்கறரு வீட்டில இருந்து அவங்கவங்க வண்டி எடுக்கறதுண்ணு காலைல ஒரே கலவரமான கலையா இருக்கும் போல! ஆனா பாக்க எவ்வளவு சுவாரஸ்யமா இருக்கு’ல.

சரி சிட்டூஸ்.. காத்து வாக்குல லேக் தாஹோல போட்ட கூடார மெத்தை கூப்பிடுது.. நான் போய் ரெஸ்ட் எடுக்கப்போறேன். நீங்களும் இந்த புத்தாண்ட மகிழ்ச்சியா கொண்டாடுங்க… அடுத்த மாதம்

 பாக்கலாம் பறக்கலாம்! ஊர் சுத்தலாம்!! லல்லாலாலாலாலா

லல்லல்லா

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments