ஓவியத்தொடர்-13 – லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)
ஹாய் குட்டீஸ்…
இந்த பகுதியில் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

அவர்தான் பிரபல ‘மோனாலிசா’ ஓவியத்தை வரைந்தவர். ஆமாம். அது ஒன்றைச்சொன்னால் எளிதில் புரியும் என்பதால் அதைச் சொன்னேன்.

இவர் கிபி 1452ல் இத்தாலியில் வின்சி எனும் இடத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதில் இருந்தே ஓவியக்கலையில் மிகவும் ஆர்வமுள்ளவர். தாத்தாவால் வளர்க்கப்பட்ட இவர் சட்டப்படிப்பு படித்தவர். இவரது ஓவியக்கலை குருவாக பிரபல சிற்பி ஆண்ட்ரியா வெரோச்சி இருந்தார்.


லியோனர்டோ என்றதும் அவரது ஓவியங்கள் மட்டுமே நமக்கு ஞாபகம் வரும் இல்லையா?. ஆனால் அவர் வெறும் ஓவியக்கலையில் மட்டும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு அற்புதமான பொறியாளர், சிற்பி, வானியலாளர், அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஆகவும், அதோடு மருத்துவத்துறையிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

தனது பொறியியல் ஆர்வத்தின் விளைவாக, பறக்கும் விமானங்கள்,இயந்திர ஆயுதங்கள் என பலவற்றை கற்பனையாக வரைந்து திட்டமிட்டார். இவை செயல்படவில்லையே தவிர அவரது பல்வேறு துறை ஆர்வத்தை இவை பிரதிபலிக்கிறது. கட்டிடக்கலை நிபுணராகவும் விளங்கினார்.


இவரது இன்னொரு உலகப்புகழ்பெற்ற படைப்பு இயேசுவின் கடைசி இரவு உணவு (The Last Supper). இது கிபி 1498ல் வரையப்பட்டது. டாவின்சி கிபி 1519ல் மறைந்தார்.

மிகச்சுருக்கமாக அவரைப்பற்றிய அறிமுகமே இந்த பக்கம். உண்மையில் அவரைப்பற்றி இன்னும் அதிகமான தகவல்களை ஆர்வமாக படிக்கலாம் நீங்கள். அப்பா, அம்மாவிடம் சொல்லி தரவிறக்கி படித்துப்பாருங்கள். அவ்வளவும் ஆச்சரியம் தரும்.

தொடரும்…