“பாட்டி! பாட்டி! இன்னிக்கு சண்டே இல்லே, காலைலே என்ன டிபன் பண்ணப் போறீங்க பாட்டி?”

“உனக்கு வெஜ் ஆம்லெட் பண்ணித் தரவா கண்ணா!”

“இதுல என்ன எல்லாம் போட்டுப் பண்ணுவீங்க பாட்டி?”

“வா! நாம ரெண்டு பேரும் சேர்ந்தே பண்ணலாம்! என்ன சரியா?”

“ஓகே பாட்டி! வாங்க செய்யலாம்!”

“முதல்ல 2 கப் கோதுமை மாவு எடுத்து இந்தப் பாத்திரத்தில போடு!”

“டன்! அடுத்து? ஒவ்வொண்ணா சொல்லுங்க பாட்டி, நான் செய்யறேன்!”

“சரிடா கண்ணா! அடுத்து 1 கப் கடலை மாவு!”

“ஓகே”

“இதுலேயே தேவையான உப்பையும் போடணும், எடுத்து வச்சிருக்கேன் இல்லையா, அதைப் போடு!”

“இப்போ பாட்டி செய்யறேன், அடுப்புல வாணலியை வச்சுக் கொஞ்சமா ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடான உடனே பொடியா நறுக்கி வச்சிருக்குற வெங்காயத்தைப் போடணும், அப்புறம் ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சி, ஏதேனும் ஒரு கீரை ஒரு கப் (பொடியா நறுக்கினது), அரைக்கீரை/முளைக்கீரை….. இந்த மாதிரி ஏதாவது ஒன்று போட்டு, 2 சிட்டிகை உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கடைசியா மல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா கொஞ்சம் போட்டுக் கிளறி, இந்தக் கலவையை மாவில் போட்டுக் கலந்துக்கணும். 

நீங்க சின்னப் பிள்ளைகளா இருக்கிறதுன்னால இதுல பச்சை மிளகாய் போடலை.

தண்ணீர் விட்டுத் தோசை மாவு பதத்தில் கலந்து தோசைகளாக வார்க்க வேண்டியது தான். இப்போ வெஜ் ஆம்லெட் ரெடி! 

omelette 1

இதுக்குத் தொட்டுக்க, காரச் சட்னி/ தேங்காய்ச் சட்னி நல்ல காம்பினேஷன்.

“இந்தா சாப்பிட வாடா கண்ணா!”

“எப்படி இருக்கு?”

“பாட்டி! சூப்பரா இருக்கு! யம்மி!”

“என்ன குழந்தைங்களா! நீங்களும் உங்க வீட்டுல உங்க அம்மாவைச் செய்து தரச் சொல்லிக் சாப்பிடுகிறீர்களா? அடுத்த இதழில் பார்ப்போம்

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments