டிசம்பர் 22 – தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற ஸ்ரீனிவாச ராமானுஜனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் அன்றைய இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.மேலும் படிக்க –>

டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம். சில நம்பிக்கை மனிதர்களைத் தான் இந்த இதழின் இவர் யார் தெரியுமா பகுதியில் பார்க்க போகிறோம். ஆட்டிசம் பாதித்த நிலையிலிருந்து சாதித்தவர்களும் உண்டு.அதில் டெம்பிள் கிராண்டின் என்பவர் முக்கியமானவர். தாமஸ் ஆல்வா எடிசன் கூட ஆட்டிச நிலையாளர் என்று கூறுபவரும் உண்டு. டெம்பிள் கிராண்டின்(Temple Grandin) கொலராடோ பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் துறையில் ஒரு பேராசிரியர். ஆட்டிச நிலையாளரான இவர் தனது சிறுவயதில்மேலும் படிக்க –>

இந்தக் கட்டத்திற்குள் பல தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ, இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ ஒளிந்து இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து கீழே உள்ள கமெண்ட்ஸில் பதிவிடவும்.மேலும் படிக்க –>

நூல் : மரப்பாச்சி சொன்ன ரகசியம் ஆசிரியர் : யெஸ். பாலபாரதி பதிப்பகம் : வானம் பதிப்பகம் விலை : ₹60 வாசிப்பு அனுபவம் : பாட்டி வீட்டுக்குப் போன போது மரப்பாச்சி பொம்மையை ஷாலினிக்குக் கொடுக்கிறார் பாட்டி. ஒரு நாள் அது பேசவும், ஆடவும் செய்கிறது. ஷாலினியின் தோழி பூஜாவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அவளுக்கு ஷாலினியின் மரப்பாச்சி உதவுகிறது. நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி மரப்பாச்சிமேலும் படிக்க –>

ஓடு! ஓடு! இடத்தைப் பிடி! பார்வதி பாட்டி சொல்லிக் கொடுத்த காகிதக் கப்பல் அவர்களின் குடியிருப்பில் பெரிய வரவேற்பை பெற்று விட்டது.  குடியிருப்புவாசிகளிடம் பாட்டி மிகவும் பிரபலமாகி விட்டாள். பிள்ளைகள் எல்லாம் இப்போது பட்டாபி தாத்தாவை விட்டுவிட்டு பாட்டியிடம் புதிய விளையாட்டு கேட்டுக் கொண்டு வந்தனர்.  “என்ன பார்வதி.. ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்ட..” என்று பட்டு தாத்தா தன் மனைவியை கலாய்த்தார்.  பாட்டி சிரிப்புடன் வீட்டு வேலையைச் செய்துமேலும் படிக்க –>

ஒரு சிறிய கிராமத்தில் ‌ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் இருந்த விளைநிலத்தில் விவசாயியால் தனது விவசாயத் தொழிலை சரிவரச் செய்ய முடியவில்லை. மழை பொய்த்து விட்டது. விதை நெல் வாங்குவதற்கும் கையில் பணவசதி இல்லை. ஊரில் இருந்த செல்வந்தர்களிடம் உதவி கேட்டும் யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லை. அவனும் அவனது குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள். வயதான பெற்றோர், கனிவும் அன்பும் கொண்ட மனைவி, சிறு குழந்தைகள் அனைவரும்மேலும் படிக்க –>

புதிய மனிதன்! தோட்டத்துக்குள் நுழைந்த காலின் முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறி விட்டான். அவனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அதன் பின் தினமும் மேரியுடனும் டிக்கனுடனும் அங்கு செல்ல ஆரம்பித்தான். டிக்கனின் செல்லப் பிராணிகள் இப்போது காலினுடனும் நட்பாகப் பழக ஆரம்பித்தன.  நாட்கள் செல்லச் செல்ல அதிசயத்திலும் அதிசயமாகக் காலினின் உடல் நலம் தேறியது. இறந்து போவதைப் பற்றியோ நோயைப் பற்றியோ இப்போது அவன் பேசுவதே இல்லை.மேலும் படிக்க –>