கன்னிக்கோவில் ராஜா லாலிபாப் கதைகள்
சிறார் எழுத்தாளர் திரு கன்னிக்கோவில் ராஜா அவர்களின் யூடியூப் காணொளி இது. இதில் அவர் எழுதிய கதைகளைக் கேட்டு மகிழலாம். அக்கதைகளை வாசித்த குழந்தைகளும், அழகாகக் கதை சொல்கின்றனர். குழந்தைகள் கதை எழுதப் பயிற்சியும் தருகின்றார். குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள காணொலி காட்சிகள்! கண்டும், கேட்டும் இன்புறுங்கள். இணைப்பு:- https://www.youtube.com/channel/UCP0eEpohVkH7bd3clWYXF4gமேலும் படிக்க –>
சிட்டுக் குருவி
சிட்டுக் குருவி – இது ஒரு குழந்தைகளுக்கான ஒலித்தளம் (PODCAST) இந்த ஒலித்தளத்தினை தீபிகா அருண் என்பவர் இயக்கி வருகிறார். அவரும் அவரது செல்ல மகளும், மழலைத் தமிழில் சிறுவர்களுக்கான பாடல்கள், புதிர்கள், சின்னச்சின்ன புதிர்கள், கதைகள் என குட்டிக்குட்டிப் பகுதிகளாகக், கேட்பதற்குச் சுவாரசியமாக உருவாக்கியுள்ளனர். இவ்வொலித்தளத்தினை ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இரண்டிலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.மேலும் படிக்க –>
பொம்மியும் திருக்குறளும்
வணக்கம் பூஞ்சிட்டுக்களே! ஒவ்வொரு மாதமும் இந்தப் பகுதில, நமக்குப் பிடிச்ச குழந்தைகள் நூல்களைப் பத்தியும், தொலைக்காட்சித் தொடர்களைப் பத்தியும் புதுசா என்னென்ன படைப்புகள் வெளிவந்திருக்கு, எந்த வயது குழந்தைகளுக்கான படைப்புகள்ன்னு எல்லா விவரங்களைப் பத்தியும் அலசப்போறோம். என்ன நிகழ்ச்சி: பொம்மியும் திருக்குறளும் எங்க பார்க்கலாம்: சுட்டி டிவி மற்றும் யூட்யூப் தளத்தில். யார் யார் பார்க்கலாம்: மூன்று வயது குழந்தைகள்ல இருந்து பெரிய குழந்தைகளும் பார்க்கலாம். பெரியவங்களும் கூட பார்க்கலாம்.மேலும் படிக்க –>