1. சிட்டு! வானம் ஏன் நீலமாகத் தெரிகின்றது?   சதீஷ், திருச்சி.

நம்முடைய பூமியைச் சுற்றிக் காற்று மண்டலம் (atmosphere) இருக்கின்றது. இதையே நாம் வானம் என்று குறிப்பிடுகின்றோம்.  சூரியனிலிருந்து பூமிக்கு வரும் ஒளிக்கதிரில், சிவப்பு, ஊதா, நீலம் போன்ற பலநிறக் கதிர்கள் உள்ளன.  அந்த ஒளிக்கதிர், காற்று மண்டலம் வழியாக, பூமியை நோக்கி வரும் போது, சிதறுகின்றது.  குறுகிய அலைநீளம் கொண்ட நீலம் மற்றும் ஊதா நிறக்கதிர்கள், அதிக சிதறலுக்கு உள்ளாகின்றன. ஊதாவை விட, நம் கண்களுக்கு நீல நிறத்தைக் காணும் திறன் அதிகம் என்பதால், வானம் நீல நிறமாகத் தெரிகின்றது சதீஷ். 

2.  நகம் வெட்டும் போது, வலிப்பதில்லையே ஏன் சிட்டு?  மேகா, சிதம்பரம்.

நகம் உயிருள்ள செல்களால் உருவான உறுப்பல்ல.. அது கெராட்டின் என்ற‌ புரதப்பொருளால் உருவானது. இதில் ரத்தக்குழாய்களும் நரம்புகளும் இல்லை. அதனால் நுனி நகத்தை வெட்டினால் இரத்தமும் வருவதில்லை. வலிப்பது மில்லை. சரிதானா, மேகா🙂

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments