அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்குறேன்.
எப்படிச் சொல்றே?
நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு….
இருமல் தாத்தவை வச்சுப் படம் பண்றீங்களா? படம் பேரு என்ன?
“குட் லொக்”
கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
நீ என்னாவே…?
காலியாயிருவேன்…
எதுக்கு நீங்க சாப்பாட்டுல கோந்தைக் கலந்துக்குறீங்க…???
அப்பதான் சார், சாப்பாடு உடம்புல ஒட்டுது…
அவர் பல் டாக்டரா ?
எப்படித் தெரிஞ்சது ?..
பல்லாண்டு வாழ்க-னு வாழ்த்துறதுக்குப் பதில் பல்-ஆடி வாழ்கனு
சொல்றாரே…
கும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்.