ஆசிரியர் – அலெக்ஸாண்டர் குப்ரின்
தமிழாக்கம் – சாலை செல்வம்
குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம், கோயம்புத்தூர் (9843472092/9605417123)
விலை ரூ 75/-
எந்தப் பேதமும் இன்றி மற்ற உயிர்களையும் தம் உயிருக்கு இணையாக நேசிப்பது, குழந்தைகளின் இயல்பு. ஐந்தறிவு, ஆறறிவு என்ற பேதமெல்லாம், அவர்களுக்கில்லை. நிஜ யானையை வீட்டுக்குக் கொண்டு வருவது முடிகிற காரியமா என்றெல்லாம் குழந்தைகள் யோசிப்பதில்லை. அதுவும் நோயுற்றிருக்கும் போது, அவர்கள் அடம் பிடிப்பது இயல்பு.
இந்தச் சிறுவர் சிறுகதையில் நோயுற்றிருக்கும் நாதியா என்கிற சிறுமி தனக்கு உயிருள்ள யானை வேண்டும் என அம்மாவிடம் அடம் பிடிக்கிறாள். மற்ற குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மை, சாக்லேட்டு என எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளது விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்றி வைத்து, சலிப்படையாமல் பார்த்துக் கொள்ளுமாறு, மருத்துவர் நாதியாவின் பெற்றோரிடம் சொல்கிறார். அவளுடைய கடைசி ஆசையை, எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என அவள் தந்தை, வெளியில் செல்கிறார். அவர் உயிருள்ள யானையை வீட்டுக்குக் கொண்டு வந்தாரா? நாதியா குணமடைந்தாளா? என்பதைத் தெரிந்து கொள்ள, கதையை வாசியுங்கள். குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள். குழந்தையின் மனப்போக்கை அருமையாகச் சித்தரித்து, வாசிக்கும் சிறுவர்களை மகிழ்வூட்டும் கதை.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.