வணக்கம் குழந்தைகளே, புது வருஷத்துல எல்லாரும் goals (குறிக்கோள்) யோசிற்றிங்களா? சரி, குறிக்கோள் எந்த மாதிரி இருந்தா அதை செயல்படுத்துவது எளிதாக இருக்கும்னு பார்ப்போமா?
SMART ah இருக்கணும், அதாவது
S – simple/ small, (எளிமையானது)
M – Measurable(அளவிட கூடியது)
A – Action Oriented(செயல் சார்ந்தது)
R – Realistic(செயல்படுத்த முடியும்)
T – Time bound (நேர வரையறை)

இப்போ என்னோட ஒரு குறிக்கோள் Smart ஆ இருக்கா இல்லையா என்று பார்ப்போமா?
1.நான் 2023 ல 50 புத்தகம் வாசிக்க வேண்டும்
இது நேர வரையறைக்கு உட்பட்டதா? ஆம், 52 வாரம் ஒரு வருடத்திற்கு, வாரம் ஒரு புத்தகம் படித்து 50 புத்தகங்கள் படிக்க முடியும் ஒரு வருடத்தில்.
அளவிட முடியுமா?, கண்டிப்பாக ஒவ்வொரு மாதமும் நான்கு புத்தகங்களாவது படித்தேனா, அடுத்த மாதம் படிக்க நான்கைந்து புத்தகமாவது வாங்கி விட்டேனா என்று அளவிட முடியும்.
எளிமையான குறிக்கோளா ? ஆம். புத்தகம் படிப்பது எளிமையான இனிமையான அறிவை வளர்க்கும் நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளும் குறிக்கோள் தான். செயல் சார்ந்தது மற்றும் செயல் படுத்த முடிந்த குறிக்கோள்.
இது போல என்னுடைய இன்னும் சில குறிக்கோள் Smart ஆ என்று சொல்கிறீர்களா ?வருடத்தில் 300 நாளாவது தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும், தினமும் எவ்வளவு நேரம் என்பதை குறித்து கொள்ள வேண்டும்.
10 கதைகள் எழுத வேண்டும்.
இது போல உங்களுடைய குறிக்கோள்களை அடைவதற்கு அது ஸ்மார்ட்டா இருக்கானு பாருங்க குழந்தைகளே, இல்லை எனில் அதை Smart ஆ மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து 2023 ல உங்கள் குறிக்கோளை அடைய சில படிகளை எடுத்து வையுங்கள் தங்கங்களே 🙂