அன்னபூரணி தண்டபாணி (Page 4)

நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.

iaf

சுட்டீஸ்! இந்த அக்டோபர் மாதத்தில் நம் நாட்டில் மிகச் சிறப்பான தினம் ஒன்றைக் கொண்டாடுகிறோம். அது என்னவென்று பார்க்கலாமா? October 8 இந்திய விமானப்படை தினம். Indian Airforce Day இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (IAF, Bhartiya Vayu Sena) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.மேலும் படிக்க…

ozone e1600235559940

ஹாய் சுட்டீஸ்!  இந்த செப்டம்பர் மாதத்தில், நம்ம நாட்டில, ஆசிரியர்கள் தினம் கொண்டாடற மாதிரி, உலக அளவில இன்னொரு முக்கியமான நாளையும் கொண்டாடறாங்க, அது என்ன தெரியுமா?  செப்டம்பர் 16 – சர்வதேச ஓசோன் தினம் ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக்கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனைப் பாதுகாக்க ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன்மேலும் படிக்க…

chutti

குழந்தைகளின் குதூகலம் ‘பட்டு பட்டு!’ என்று அந்த குடியிருப்பின் குட்டிக் குழந்தைகள் எல்லாம் பட்டாபித் தாத்தாவை சுற்றிச் சுற்றி வந்தனர்.  பார்வதி பாட்டிக்கு அதிசயமாக இருந்தது.  ‘என்ன இந்தக் குழந்தைகள் எல்லாம் இன்று இவரை இப்படி மொய்த்துக் கொள்கிறார்கள்? அதிசயமாக இருக்கிறதே!’ என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.  எல்லாம் அந்த தீப்பெட்டி ஃபோனில் பேசும் விளையாட்டு பிடித்துப் போனதால் என்று பாட்டிக்குப் புரியவில்லை.  “பட்டு.. எப்ப பேர்ட் வாச் போறோம்..” மேலும் படிக்க…

velu nachiyar

செழியனும் குந்தவியும் அன்று வகுப்பில் ஆசிரியர் தொல்காப்பியன் அவர்கள் நடத்திய இராணி வேலு நாச்சியார் பற்றிய பாடத்தைப் பற்றி பேசிக் கொண்டே வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். “செழியன்! நம்ம தொல்காப்பியன் சார், வேலு நாச்சியார் பத்தி சொன்னது ரொம்ப ஆச்சர்யமா இருந்ததுல்ல..” “ஆமா குந்தவி! ரொம்பவே ஆச்சர்யமாதான் இருந்தது.. அவங்கதான் நம் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்ணாமே.. க்ரேட் இல்லடீ..” “ஆமா செழியன்.. சார்மேலும் படிக்க…

chittu mithu

தீப்பெட்டியும் நூலும்.. மித்து தன் குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான். முகக்கவசம் (mask) அணிந்திருந்தாலும் அவன் முகத்தின் வாட்டம் தெளிவாகத் தெரிந்தது. பட்டாபி தாத்தா தன் மாலை நடைப்பயிற்சியை பாதியில் கைவிட்டுவிட்டு மித்து அமர்ந்திருந்த சிமென்ட் பெஞ்சில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்தார். “என்ன மித்து.. இங்க உக்காந்திருக்க.. வெளையாடப் போகலயா?” என்று கேட்டார். “போ பட்டு.. எல்லாம் உங்களாலதான்..” என்று அவன் கோபம் கலந்த வருத்தத்துடன்மேலும் படிக்க…

WhatsApp Image 2020 07 15 at 9.54.52 AM

மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி.  மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை.  சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது.  அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரைமேலும் படிக்க…