புவனா சந்திரசேகரன் (Page 7)

malaikottai

சித்திரக்குள்ளன் தனது கதையை துருவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தான். இங்கிருந்து வெகு தூரத்தில் எங்களுடைய தேசம் இருக்கிறது‌. சித்திக்குள்ளர்களின் தேசமான சித்ரபுரி தான் எனது தேசம். நான் அந்த தேசத்தின் இளவரசன். என்னுடைய பெயர் அபூர்வன். என்னுடைய தாய், தந்தையருக்கு நான் ஒரே மகன் என்பதால் எல்லோருக்கும் அதிக செல்லம். கண்டிப்பே இல்லாமல் வளர்ந்ததால் குறும்புத்தனமும் என்னிடம் மிகவும் அதிகமாக இருந்தது. வளர‌வளர எனக்கு இளவரசன் என்ற அகந்தையும்மேலும் படிக்க…

kakkai

கருணா அவர்கள் வீட்டின் இளவரசி. அவளோட அம்மா, அப்பாவிற்கு ஒரே மகள். ரொம்பச் செல்லம். ஆனாலும் கருணா  ரொம்ப நல்ல பொண்ணு தான். பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குவா‌. சொன்ன பேச்சைக் கேப்பா. அப்புறம் எல்லோருக்கும் தானாவே உதவி செய்வா. அதுனாலயே அவளை எல்லோருக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கருணாவோட பாட்டி அவங்க வீட்டிலயே அவங்க கூடத்தான் இருந்தாங்க. அதுனால கருணா பாட்டிக்கும் செல்லம் தான். அவளுக்கும் பாட்டியை ரொம்பமேலும் படிக்க…

maayavi

அணிலைக் கண்டு சிரித்ததற்காக உண்மையில் மனம் வருந்தினான் துருவன். “அணில் தம்பி. என்னை மன்னித்து விடப்பா. ‘உருவம் கண்டு எள்ளாமை‌ வேண்டும்’ என்ற சொற்களின் முழு உண்மையையும் இன்று நான் புரிந்து கொண்டேன். உன்னுடைய சிறப்பான தகுதியின் முன்னால் நான் தான் இன்று சிறியவனாக உணர்கிறேன். உங்கள் மூவரின் உதவியுடன் நிச்சயமாக நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெறுவேன். நாம் விரைந்து கிளம்பலாம். எண்ணிய கருமத்தை உடனடியாக நிறைவேற்றுவதேமேலும் படிக்க…

fathermanthiram

“குமரா, ஸ்கூல் பஸ் வர டயம் ஆச்சு. இன்னுமா ரெடியாகலை நீ? ராகவி, அவனோட ஸ்கூல் பேக்கில லஞ்ச் பாக்ஸ் வச்சுட்டயா?” என்று மகன் குமரனையும் மனைவி ராகவியையும் ஒரே சமயத்தில் கேள்விகள் கேட்டார் மகேந்திரன். “இதோ ரெடியாயிட்டேன்பா” என்று சொல்லிக் கொண்டே யூனிஃபார்ம் அணிந்த குமரன், மகேசன் எதிரே வந்து நின்றான். ராகவியும் கையில் லஞ்ச்பாக்ஸைக் கொண்டு வந்து குமரன் கையில் தர, அவனும் அதை பேக்கில் வைத்துக்மேலும் படிக்க…

kangal

ஒரு சிறிய கிராமத்தில் ‌ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் இருந்த விளைநிலத்தில் விவசாயியால் தனது விவசாயத் தொழிலை சரிவரச் செய்ய முடியவில்லை. மழை பொய்த்து விட்டது. விதை நெல் வாங்குவதற்கும் கையில் பணவசதி இல்லை. ஊரில் இருந்த செல்வந்தர்களிடம் உதவி கேட்டும் யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லை. அவனும் அவனது குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள். வயதான பெற்றோர், கனிவும் அன்பும் கொண்ட மனைவி, சிறு குழந்தைகள் அனைவரும்மேலும் படிக்க…

squirrelwings

அடுத்து வந்த சில நாட்களில் துருவனின் பயிற்சி முழுமை பெற்றது. முழுமை என்றால் நன்றாக அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தான் என்று அர்த்தமில்லை. கௌதம முனிவருக்கு இந்தக் குறுகிய காலத்தில் அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுத் தருவது கடினம் என்பது நன்றாகத் தெரியும். எவ்வளவு நல்ல மாணவனாக இருந்தாலும் எல்லாக் கலைகளையும் முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெறப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். அதனால் மிகவும் அவசியமான பயிற்சியை மட்டுமே ஆசான் துருவனுக்குமேலும் படிக்க…

malaikottai

கருணை ததும்பும் அந்த முனிவர் பேசியதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற துருவன் தன்னை ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு அந்த முனிவரைப் பணிவுடன் வணங்கினான். அறிவும் ஞானமும் சேர்ந்து ஒளி வீசுகின்ற முனிவரின் முகத்தைக் கண்டதுமே துருவனின் மனதில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் சேர்ந்து எழுந்தன. “அரசர், நம்மை ஒரு சரியான குருவிடம் தான் அனுப்பியிருக்கிறார். இவருடைய சொற்களைக் கேட்டுக் குறுகிய காலத்தில் நம்மால் முடிந்த அளவு கலைகளைக் கற்றுக் கொண்டுமேலும் படிக்க…

sombalambalam 1

அரவிந்த் படுக்கையில் புரண்டு படுத்தான். காலை ஆறு மணி. அலாரம் அடித்தது. அணைத்து விட்டுத் திரும்பவும் தூங்க ஆரம்பித்தான். “அரவிந்த், எழுந்திரு சீக்கிரம். இன்னைக்குத் தோட்டத்துக்குப் போகப் போறோம்னு நேத்தே சொன்னேன் இல்லையா? எழுந்து ரெடியாகிக்கோ. அரை மணி நேரத்தில கெளம்பணும்” என்று அம்மா சொல்லப் போர்வையில் இருந்து தலையை நீட்டிய அரவிந்த், “நான் வரலைம்மா. நீங்கள்ளாம் போய்க்கங்க. எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. என்னால இப்ப எந்திரிச்சுக் கெளம்பமேலும் படிக்க…

malaikottai

அடுத்த நாள் காலையில் காட்டில் இருந்து கிளம்பிய துருவன் தலைநகரத்தை அடைந்தான். தலைநகரைச் சுற்றி பிரம்மாண்டமான கோட்டையும், அதைச் சுற்றியிருந்த அகழியும் அவனை வரவேற்றன. அகழி என்றால் கோட்டையைச் சுற்றித் தண்ணீரைத் தேக்கி அதில் முதலைகளை விட்டிருப்பார்கள். அந்தக் காலத்தில் கோட்டைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப் படுவது. எதிரி நாட்டினர் படையெடுத்து வரும்போது நீரில் குதித்து நீந்தி வர முயற்சி செய்தால், முதலைகளுக்கு இரையாக வேண்டியது தான். அகழியைக் கடக்கப் பாலம்மேலும் படிக்க…

karunai ullam1

ஆதித்யா தாத்தா பாட்டியைப் பார்த்து உற்சாகத்தில் குதித்தான். குழந்தைகளுக்கே தாத்தா பாட்டி வந்தால் சந்தோஷம் தான். அவர்கள் ஆதித்யாவின் தந்தை அருணனின் பெற்றோர். சென்னை வாழ்க்கை பிடிக்காமல் கிராமத்தில் வசிக்கிறார்கள். இப்போது ஊரடங்கு கொஞ்சம் தளர்த்திய சமயம் அவர்கள் சென்னைக்குக் கிளம்பி வந்தார்கள். ஆதித்யா அவர்களுக்குச் செல்லப் பேரன்.  ஆதித்யா சென்னையின் பிரபல தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கிறான். “செல்லக் குட்டி, உனக்கு என்னடா வேணும்?” என்று தாத்தாமேலும் படிக்க…